Roman script

Singer : Shweta Pandit
Music by : M. M. Keeravaani
Female Part
Mella mella mella mellavae
Kanavu vizhigalodu pirakka
Ulla ulla vellai veliyil
Vanna poo virindhu thirakka
Female Part
Poovin perai kaatru
Kettu chella
Punnagai thaan endru naanum cholla
Ottrai poovin vaasam inbam alla
Female Part
Andha poovai cholaiyaai
Maatrum maayaiyai
Katru kol en manamae
Female Part
Punnagai chinna punnagai
Indha boomi maatrividumae….
Punnagai chinna punnagai
Andha vaanai kaiyil tharumae…
Female Part
Nodigal kudikkira nimidam
Magizhchi kuvikkum koodam
Adhai nee ariyum kanathin vilimbil
Kaalam kaalil vizhundhuvidum
Female Part
Kannil karpanaigal moozhattum
Yaavum mannil vandhu vaazha vendum
Konjum konjum kaatrilae
Konjam konjamaai
Oonjalaadu manamae…
Female Part
Chindhanai undhan chindhanai
Adhu vaanavillai chamaikkum
Chindhanai undhan chindhanai
Sila vaazhkkai maatri amaikkum

தமிழ்

பாடகி : ஸ்வேதா பண்டிட்
இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி
பெண் : மெல்ல மெல்ல மெல்ல மெல்லவே
கனவு விழிகளோடு பிறக்க...
உள்ள உள்ள வெள்ளை வெளியில்
வண்ணப் பூ விரிந்து திறக்க
பெண் : பூவின் பேரைக் காற்று
கேட்டுச் செல்ல
புன்னகை தான் என்று நானும் சொல்ல
ஒற்றைப் பூவின் வாசம் இன்பம் அல்ல....
பெண் : அந்த பூவை சோலையாய்
மாற்றும் மாயையை
கற்றுக்கொள் என் மனமே
பெண் : புன்னகை சின்ன புன்னகை
இந்த பூமி மாற்றிவிடுமே.....
புன்னகை சின்ன புன்னகை
அந்த வானை கையில் தருமே.....
பெண் : நொடிகள் குடிக்கிற நிமிடம்
மகிழ்ச்சி குவிக்கும் கூடம்
அதை நீ அறியும் கணத்தின் விளிம்பில்
காலம் காலில் விழுந்துவிடும்
பெண் : கண்ணில் கற்பனைகள் மூழட்டும்
யாவும் மண்ணில் வந்து வாழ வேண்டும்
கொஞ்சும் கொஞ்சும் காற்றிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
ஊஞ்சலாடு மனமே
பெண் : சிந்தனை உந்தன் சிந்தனை
அது வானவில்லை சமைக்கும்
சிந்தனை உந்தன் சிந்தனை
சில வாழ்க்கை மாற்றி அமைக்கும்

Song details

Music by: M. M. Keeravaani

Release information: From Inji Idupazhagi (2015) · Lyricist: Madhan Karky