Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Mayangi vitten…

Mayangi vitten unnai kandu

Vazhangi vitten ennai indru

Vallal karangal indha chinna idaiyil

Pinna pinna yenna sughamo

Male Part

Mayangi vitten…

Mayangi vitten unnai kandu

Vazhangi vitten ennai indru

Minnum vizhiyil ilam kanni kavidhai

Solla solla enna sugamo

Male Part

Engengae ennenna

Female : Aahaa

Male : Inbangal thondrum endru thudikka

Female Part

Angillai Male : Aahaa

Female : Ingae thaan Male : Oho

Female : Vaavendru yaedho ondru azhaikka

Male Part

Engengae ennenna

Inbangal thondrum endru thudikka

Female Part

Angillai ingae thaan

Vaavendru yaedho ondru azhaikka

Male Part

Nee edukka naan kodukka

Female Part

Naam eduthu kodutha pin

Aduthadhu nadakka

Female Part

Mayangi vitten…

Mayangi vitten unnai kandu

Vazhangi vitten ennai indru

Male Part

Minnum vizhiyil ilam kanni kavidhai

Solla solla enna sugamo

Female Part

Enni kol Male : Aahaa

Female : Yaendhi kol Male : Ohho ho

Female : Kannathin kinnam pongi vazhiyaadho

Male Part

Katti kol Female : Mmm…

Male : Otti kol Female : Mmmm…

Male : Kaattru nammidaiyil nuzhaiyaamal

Female Part

Enni kol yaendhi kol

Kannathin kinnam pongi vazhiyaamal

Male Part

Katti kol otti kol

Kaattru nammidaiyil nuzhaiyaamal

Female Part

Neiyum thariyinilae

Male Part

Nool izhai polae

Both : Naam iruvar oruvaraai nerungiyadhaalae

Mayangi vittom…

Male Part

Mayangi vitten unnai kandu

Vazhangi vitten ennai indru

Female Part

Vallal karangal indha chinna idaiyil

Pinna pinna enna sugamo

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : மயங்கி விட்டேன்......

மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்

பின்னப் பின்ன என்ன சுகமோ

ஆண் : மயங்கி விட்டேன்.....

மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை

சொல்லச் சொல்ல என்ன சுகமோ

ஆண் : எங்கெங்கே என்னென்ன

பெண் : ஆஹா

ஆண் : இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

பெண் : அங்கில்லை

ஆண் : ஆஹா

பெண் : இங்கேதான்

ஆண் : ஓஹோ

பெண் : வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

ஆண் : எங்கெங்கே என்னென்ன

இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

பெண் : அங்கில்லை இங்கேதான்

வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

ஆண் : நீ எடுக்க நான் கொடுக்க

பெண் : நாம் எடுத்துக் கொடுத்த பின்

அடுத்தது நடக்க

பெண் : மயங்கி விட்டேன்.....

மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

ஆண் : மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை

சொல்லச் சொல்ல என்ன சுகமோ

பெண் : எண்ணிக் கொள்

ஆண் : ஆஹா

பெண் : ஏந்திக் கொள்

ஆண் : ஓஹ்ஹோ ஹோ

பெண் : கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

ஆண் : கட்டிக் கொள்

பெண் : ம்ம்ம்....

ஆண் : ஒட்டிக் கொள்

பெண் : ம்ம்ம்ம்

ஆண் : காற்று நம்மிடையில் நுழையாமல்

பெண் : எண்ணிக் கொள் ஏந்திக் கொள்

கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

ஆண் : கட்டிக் கொள் ஒட்டிக் கொள்

காற்று நம்மிடையில் நுழையாமல்

பெண் : நெய்யும் தறியினிலே

ஆண் : நூல் இழை போலே

இருவர் : நாம் இருவர் ஒருவராய்

நெருங்கியதாலே மயங்கி விட்டோம்

ஆண் : மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

பெண் : வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்

பின்னப் பின்ன என்ன சுகமோ

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Annamitta Kai (1972) · Lyricist: Vaali

Explore this song