Roman script

Singers : P. Susheela and P. Jayachandran

Music by : G. K. Venkatesh

Lyrics by : Kannadasan

Female Part

Malligai poovil indru

Punnagai kolam ondru

Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa

Ennendru nee sollu

Male Part

Mannavan naanae endru

Vanthatho thendral indru

Iniyoru yaekkamillai yaekkamillai kannae

Perinpam aarambam

Female Part

Unakkum enai pol ninaivugal oraayiram

Un manam athai maraiththathai solla

Dhinam ival thudiththida mella

Un ullam pollaathathaa kannaa

Male Part

Iravum pagalum irunthathu un mogamae

En ilaiyaval illara dheepam

Yaettrida iththanai kaalam

Santhegam theerthenammaa kannae

Un thegam saernthenammaa

Female Part

Innum enna ennai konja vaa

Male : Munnum pinnum minnum kannam poovaa

Female Part

Malligai poovil indru

Punnagai kolam ondru

Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa

Ennendru nee sollu

Female Part

Tharavo peravo uriyavan neeyallavo

Than thalaivanin uravinai enni

Thanimaiyil urugiya kanni

Thallaadi nindraalaiya kannaa

Male Part

Varavum selavum uravinil undaagalaam

Un ilanagai malargalin vannam

Kaniyithazh kanirasa kinnam

Kondaada naan vendumo kannae

Kodiyaada madi vendumo

Female Part

Nenjam ennum manjam undu vaa

Male : Manjam thannil thanjam endru nee vaa

Female Part

Malligai poovil indru

Punnagai kolam ondru

Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa

Ennendru nee sollu

Ennendru nee sollu

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மல்லிகை பூவில் இன்று

புன்னகை கோலம் ஒன்று

மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா.....

என்னென்று நீ சொல்லு

ஆண் : மன்னவன் நானே என்று

வந்ததோ தென்றல் இன்று

இனியொரு ஏக்கமில்லை ஏக்கமில்லை கண்ணே....

பேரின்பம் ஆரம்பம்....

பெண் : உனக்கும் எனைப் போல் நினைவுகள் ஓராயிரம்

உன் மனம் அதை மறைத்ததை சொல்ல

தினம் இவள் துடித்திட மெல்ல

உன் உள்ளம் பொல்லாததா கண்ணா....

ஆண் : இரவும் பகலும் இருந்தது உன் மோகமே

என் இளையவள் இல்லற தீபம்

ஏற்றிட இத்தனை காலம்

சந்தேகம் தீர்ந்தேனம்மா கண்ணே....

உன் தேகம் சேர்ந்தேனம்மா.....

பெண் : இன்னும் என்ன என்னைக் கொஞ்ச வா

ஆண் : முன்னும் பின்னும் மின்னும் கன்னம் பூவா

பெண் : மல்லிகை பூவில் இன்று

புன்னகை கோலம் ஒன்று

மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா.....

என்னென்று நீ சொல்லு

பெண் : தரவோ பெறவோ உரியவன் நீயல்லவோ

தன் தலைவனின் உறவினை எண்ணி

தனிமையில் உருகிய கன்னி

தள்ளாடி நின்றாளைய்யா கண்ணா.....

ஆண் : வரவும் செலவும் உறவினில் உண்டாகலாம்

உன் இளநகை மலர்களின் வண்ணம்

கனியிதழ் கனிரசக் கிண்ணம்

கொண்டாட நான் வேண்டுமோ கண்ணே...

கொடியாட மடி வேண்டுமோ

பெண் : நெஞ்சம் என்னும் மஞ்சம் உண்டு வா....

ஆண் : மஞ்சம் தன்னில் தஞ்சம் என்று நீ வா.....

பெண் : மல்லிகை பூவில் இன்று

புன்னகை கோலம் ஒன்று

மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா.....

என்னென்று நீ சொல்லு

என்னென்று நீ சொல்லு

Song information

Singers: P. Susheela and P. Jayachandran

Music by: G. K. Venkatesh

Lyrics by: Kannadasan

Release information: From Pennin Vazhkkai (1981) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh

Explore this song