Roman script
Singer : C. S. Jayaraman Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum Male Part Saadhi veri konda veenargal baedham paesi paesi Vilagi poi vaazhndhaalum vaazhattum Oru varusaikkul nilladha kalasam pol ivarellaam Thalai suttri veezhndhaalum veezhattum andha Male Part Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum Male Part Keduvaargal endraikkum keduvaar Gunam kudi kondaar inbam thandhiduvar Male Part Madhiyattra moodargal vazhukki vazhukki veezhndhu Madhikkapattu ponaalum pogattum innum Gadhi ketta kaaligal kaludhaigalai thottu Udhaipattu sethaalum saagattum verum Male Part Padharaipol ulagathil payanattru thirivoorgal
Edharkiraiyaanalum aagattum mannil Adhiga kalvi kattrum mudhukelumbattrorgal Anal pattri vendhaalum vaegattum andha Male Part Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum Male Part Keduvaargal endraikkum keduvaar Gunam kudi kondaar inbam thandhiduvar Male Part Aazham theriyaamal kaalai vittoor moozhgi Aattrodu poravadi singi azhudhu payan ennadi Sondha maanam thanai vittru maandhar muraikettu Veenaaga azhivaaradi singi meelum vazhi kaanaradi Male Part Indha ulutharuendhanaalum Unmaigalai sonnaalum Karunthanil kollaaradi singi Kandapadi selvaradi mannil Male Part Keduvaargal endraikkum keduvaar Gunam kudi kondaar inbam thandhiduvar Male Part Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி கூக்குரல் போட்டாலும் போடட்டும் இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி திண்டாடினாலும் திண்டாடட்டும் ஆண் : சாதி வெறி கொண்ட வீணர்கள் பேதம் பேசி பேசி விலகிப்போய் வாழ்ந்தாலும் வாழட்டும் ஒரு வரிசைக்குள் நில்லாத கலசம் போல் இவரெல்லாம் தலை சுற்றி வீழ்ந்தாலும் வீழட்டும் அந்தக் ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி கூக்குரல் போட்டாலும் போடட்டும் இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி திண்டாடினாலும் திண்டாடட்டும் ஆண் : கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம் குடிகொண்டார் இன்பம் தந்திடுவார் ஆண் : மதியற்ற மூடர்கள் வழுக்கி வழுக்கி வீழ்ந்து மதிக்கப்பட்டுப் போனாலும் போகட்டும் இன்னும் கதி கெட்டக் காலிகள் கழுதைகளைத் தொட்டு உதைபட்டுச் செத்தாலும் சாகட்டும் வெறும் ஆண் : பதரைப்போல் உலகத்தில் பயனற்றுத் திரிவோர்கள் எதற்கிரையானாலும் ஆகட்டும் மண்ணில் அதிகக் கல்வி கற்றும் முதுகெலும்பற்றோர்கள் அனல் பற்றி வெந்தாலும் வேகட்டும் அந்தக் ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி கூக்குரல் போட்டாலும் போடட்டும் இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி திண்டாடினாலும் திண்டாடட்டும் ஆண் : கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம் குடிகொண்டார் இன்பம் தந்திடுவார் ஆண் : ஆழம் தெரியாமல் காலை விட்டோர் மூழ்கி ஆற்றோடே போவாரடி சிங்கி அழுது பயனென்னடி சொந்த மானம் தனை விற்று மாந்தர் முறைக்கெட்டு வீணாக அழிவாரடி சிங்கி மீளும் வழி காணாரடி ஆண் : இந்த உலுத்தருக்கெந்நாளும் உண்மைகளை சொன்னாலும் கருத்தினில் கொள்ளாரடி சிங்கி கண்டபடி செல்வாரடி மண்ணில் ஆண் : கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம் குடிகொண்டார் இன்பம் தந்திடுவார் ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி கூக்குரல் போட்டாலும் போடட்டும் இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி திண்டாடினாலும் திண்டாடட்டும்
Song information
Singer: C. S. Jayaraman
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Paasavalai (1956) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Paasavalai
- Composer: Vishwanathan-Ramamoorthy