Roman script
Singer : T. M. Soundararajan Music by : Viswanathan–Ramamoorthy Whistling : …………………… Male Part Kelvi pirandhadhu andru Nalla badhil kidaiththadhu indru Aasai pirandhadhu andru Yaavum nadandhadhu indru Male Part Kelvi pirandhadhu andru Nalla badhil kidaiththadhu indru Aasai pirandhadhu andru Yaavum nadandhadhu indru Male Part Aandaan adimai maelor keezhor Enbadhu maaraadho Aandaan adimai maelor keezhor Enbadhu maaraadho Arasan illaamal janangal aalum Kaalamum vaaraadho Endroru kaalam yengiyadhundu Indru kidaiththadhu badhil ondru Indru evarum bedham sonnaal Irandu varudam jail undu Male Part Kelvi pirandhadhu andru Nalla badhil kidaiththadhu indru Aasai pirandhadhu andru Yaavum nadandhadhu indru Male Part Vaanathil yeri chandira mandala Vaasalai thodalaamaa?… Vaanathil yeri chandira mandala Vaasalai thodalaamaa?… Male Part Maandu kidakkum manidhanin maeni Marupadi ezhalaamaa?.. Endroru kaalam yengiyadhundu Indru kidaiththadhu badhil ondru Gnyaanam pirandhu vaanil parandhu Meendu vandhaan uyir kondu Male Part Kelvi pirandhadhu andru Nalla badhil kidaiththadhu indru Aasai pirandhadhu andru Yaavum nadandhadhu indru Male Part Kulamagal vaazhum iniya kudumbam Kovilukku inaiyaagum Kulamagal vaazhum iniya kudumbam Kovilukku inaiyaagum Kurai theriyaamal uravu kondaalae Vaazhvum suvaiyaagum Padiththa maandhar irukkum naattil Paarkkum yaavum podhu udamai Nalla manamum pillai gunamum Namadhu veettin thani udamai Male Part Kelvi pirandhadhu andru Nalla badhil kidaiththadhu indru Aasai pirandhadhu andru Yaavum nadandhadhu indru
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று ஆண் : கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று ஆண் : ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று இன்று எவனும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு ஆண் : கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று ஆண் : வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா ஆண் : மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று ஞானம் பிறந்து வானில் பறந்து மீண்டு வந்தான் உயிர் கொண்டு ஆண் : கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று ஆண் : குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும் படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது வீட்டின் தனி உடைமை ஆண் : கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Viswanathan–Ramamoorthy
Release information: From Pachhai Vilakku (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Pachhai Vilakku
- Composer: Viswanathan–Ramamoorthy