Roman script

Singer : L. R. Eswari

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female Part

Kaalai kulithezhnthu karunjaanthu pottumittu

Kaarkkoondhal pnnalittu

Kaaththirunthaen un varavai

Kadai kannaal paaththirunthaen

Female Part

Kaaththirunthaen mama kaividalaamaa

Kann niraintha ponnukkitta

Poi sollalaama

Kaaththirunthaen mama kai vidalaamaa

Female Part

Vatta vatta kondaiyitta chittakkuruvi

Un pattanaththil kidaikkumaa intha maathiri

Vatta vatta kondaiyitta chittakkuruvi

Un pattanaththil kidaikkumaa intha maathiri

Kattazhagum pottazhagum konta kaviri nee

Kanniyamaa vaazhanumnaa ennai kadhali

Female Part

Haah kaaththirunthen mama kaividalaamaa

Kann niraintha ponnukkittae

Poi sollalaama

Kaaththirunthaen mama kai vidalaama…

Female Part

Chinnaalappatti thantha selaiyai katti

Dhinam sivakkira kaalkalilae thandaiyai katti

Chinnaalappatti thantha selaiyai katti

Dhinam sivakkira kaalkalilae thandaiyai katti

Ponnaana manjalukku aaduthu kutty

Ponnaana manjalukku aaduthu kutty

Idhai purinju rasikkanum nee kaikalai thatti

Female Part

Vetkaththai vittu vittu sirichchu vatchaen

En vivaraththa munnaala thelichchu vatchchen

Vetkaththai vittu vittu sirichchu vatchaen

En vivaraththa munnaala thelichchu vatchchen

Ennathaan vendum endru solli vidalaam

Ennathaan vendum endru solli vidalaam

Illai ishtamilla endraalum thalli vidalaam

Female Part

Kaaththirunthaen mama kaividalaamaa

Kaaththirunthaen mama kaividalaamaa

Kann niraintha ponnukkitta

Poi sollalaama

Kaaththirunthaen mama kai vidalaamaa….

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டுமிட்டு

கார்க்கூந்தல் பின்னலிட்டு

காத்திருந்தேன் உன் வரவை

கடைக் கண்ணால் பாத்திருந்தேன்......

பெண் : காத்திருந்தேன் மாமா கைவிடலாமா

கண் நிறைந்த பொண்ணுக் கிட்டே

பொய் சொல்லலாமா

காத்திருந்தேன் மாமா கை விடலாமா.....

பெண் : வட்ட வட்ட கொண்டையிட்ட சிட்டுக்குருவி

உன் பட்டணத்தில் கிடைக்குமா இந்த மாதிரி

வட்ட வட்ட கொண்டையிட்ட சிட்டுக்குருவி உன்

பட்டணத்தில் கிடைக்குமா இந்த மாதிரி

கட்டழகும் பொட்டழகும் கொண்ட காவிரி நீ

கண்ணியமா வாழணும்னா என்னைக் காதலி

பெண் : ஹாஹ் காத்திருந்தேன் மாமா கைவிடலாமா

கண் நிறைந்த பொண்ணுக் கிட்டே

பொய் சொல்லலாமா

காத்திருந்தேன் மாமா கை விடலாமா.....

பெண் : சின்னாளப்பட்டி தந்த சேலையைக் கட்டி

தினம் சிவக்கிற கால்களிலே தண்டையைக் கட்டி

சின்னாளப்பட்டி தந்த சேலையைக் கட்டி

தினம் சிவக்கிற கால்களிலே தண்டையைக் கட்டி

பொன்னான மஞ்சளுக்கு ஆடுது குட்டி

பொன்னான மஞ்சளுக்கு ஆடுது குட்டி

இதை புரிஞ்சு ரசிக்கணும் நீ கைகளைத் தட்டி

பெண் : வெட்கத்தை விட்டு விட்டு சிரிச்சு வச்சேன்

என் விவரத்த முன்னால தெளிச்சு வச்சேன்

வெட்கத்தை விட்டு விட்டு சிரிச்சு வச்சேன்

என் விவரத்த முன்னால தெளிச்சு வச்சேன்

என்னதான் வேண்டும் என்று சொல்லி விடலாம்

என்னதான் வேண்டும் என்று சொல்லி விடலாம்

இல்லை இஷ்டமில்ல என்றாலும் தள்ளி விடலாம்

பெண் : காத்திருந்தேன் மாமா கைவிடலாமா

காத்திருந்தேன் மாமா கைவிடலாமா

கண் நிறைந்த பொண்ணுக் கிட்டே

பொய் சொல்லலாமா

காத்திருந்தேன் மாமா கை விடலாமா.....

Song information

Singer: L. R. Eswari

Music by: T. R. Pappa

Lyrics by: Kannadasan

Release information: From Avasara Kalyanam (1972) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa

Explore this song