Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Karuneela malai melae thaai irundhaal Kashmira pani malaiyil magan irundhaan Vara vendum pillai endru kaathirunthaal Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal Male Part Karuneela malai melae thaai irundhaal Kashmira pani malaiyil magan irundhaan Male Part Paaloottum podhilaval ninaithaala Pillai bharatham kaakkum endru valarthaala Paaloottum podhilaval ninaithaala Pillai bharatham kaakkum endru valarthaala Male Part Thaalattu paatil adhai isaithaala Pillai thaainaadu kaakum endru padithaala Thaalattu paatil adhai isaithaala Pillai thaainaadu kaakum endru padithaala Male Part Vara vendum pillai endru kaathirunthaal Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal Karuneela malai melae thaai irundhaal Kashmira pani malaiyil magan irundhaan Male Part Kunguma poopoondra manamagalai Than kulathukku vaazhvu tharum marumagalai Kunguma poopoondra manamagalai Than kulathukku vaazhvu tharum marumagalai Male Part Kannaara kaanbatharkku vaadi nindraal Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal Kannaara kaanbatharkku vaadi nindraal Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal Male Part Vara vendum pillai endru kaathirunthaal Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal Karuneela malai melae thaai irundhaal Kashmira pani malaiyil magan irundhaan Vara vendum pillai endru kaathirunthaal Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கருநீல மலை மேலே தாயிருந்தாள் காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான் வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள் வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள் ஆண் : கருநீல மலை மேலே தாயிருந்தாள் காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான் ஆண் : பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா ஆண் : தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா ஆண் : வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள் வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள் கருநீல மலை மேலே தாயிருந்தாள் காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான் ஆண் : குங்குமப் பூப்போன்ற மணமகளை தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை குங்குமப் பூப்போன்ற மணமகளை தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை ஆண் : கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள் அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள் கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள் அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள் ஆண் : வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள் வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள் கருநீல மலை மேலே தாயிருந்தாள் காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான் வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள் வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Thaaye Unakkaga (1965) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Thaaye Unakkaga
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan