Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Karpanaikku maeni thanthu Kaal salangai pottu vittaen Kaal salangai pona idam Kadavulukkum thondravillai Male Part Dheivathin thaereduththu deviyai thedu Devikku thoodhu solla thendralae odu Dheivathin thaereduththu deviyai thedu Devikku thoodhu solla thendralae odu Male Part Aavikkul aavi aanantha yaedu Avalillai endraal naan verum koodu Aavikkul aavi aanantha yaedu Avalillai endraal naan verum koodu Male Part Paavaikku pottu vaithaen naanoru kodu Paavaikku pottu vaithaen naanoru kodu Paadi paranthathammaa ilanguyil bedu Ilanguyil bedu….oo…. Male Part Dheivathin thaereduththu deviyai thedu Devikku thoodhu solla thendralae odu Male Part Neer vattri ponathendru Ninaivinil vedippu Nenjaththil thondruthammaa Vasanthathin thudippu Male Part Maamazhai megam indru Kangalil iruppu Margazhi paniyandro Avalathu sirippu Avalathu sirippu…oo…. Male Part Dheivathin thaereduththu deviyai thedu Devikku thoodhu solla thendralae odu Male Part Kambanai koopidungal Seedhaiyai kaanbaan Kavi kalidasan Aval sagunthalai enbaan Male Part Naayagiyae enathu kaaviya ellai Naayagiyae enathu kaaviya ellai Narai vizhunthaalum nenjil Thirai vizhavillai Narai vizhunthaalum nenjil Thirai vizhavillai Male Part Dheivathin thaereduththu deviyai thedu Devikku thoodhu solla thendralae odu Male Part ………………..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டு விட்டேன் கால் சலங்கை போன இடம் கடவுளுக்கும் தோன்றவில்லை ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு ஆண் : ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு அவளில்லை என்றால் நான் வெறும் கூடு ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு அவளில்லை என்றால் நான் வெறும் கூடு ஆண் : பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு பாடிப் பறந்ததம்மா இளங்குயில் பேடு..... இளங்குயில் பேடு.....ஊ...... ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு ஆண் : நீர் வற்றிப் போனதென்று நினைவினில் வெடிப்பு நெஞ்சத்தில் தோன்றுதம்மா வசந்தத்தின் துடிப்பு ஆண் : மாமழை மேகம் இன்று கண்களில் இருப்பு மார்கழிப் பனியன்றோ அவளது சிரிப்பு...... அவளது சிரிப்பு......ஊ...... ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு ஆண் : கம்பனைக் கூப்பிடுங்கள் சீதையைக் காண்பான் கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான் ஆண் : கம்பனைக் கூப்பிடுங்கள் சீதையைக் காண்பான் கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான் ஆண் : நாயகியே எனது காவிய எல்லை நாயகியே எனது காவிய எல்லை நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை....... ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு ஆண் : ...............................
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paattum Bharadhamum (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Paattum Bharadhamum
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan