Roman script
Singers : P. Leela, Kamala and Thangappan Music by : S. M. Subbaih Naidu Male Part Kallirukkum malar koondhal jaanagiyai Ilangaiyar kon kalavu soozhntha Kallamara sriraman kalang kondu Kai Valaiththu thoduththa vaali Male Part Ullirukkum uyir kondu Ilangaiyar kon udalai Verunkoodu seithu Vellamena kurithi vara Tharmaththin vetri vara Vilainthathamma….aa….aa…. Vetri vilainthathamma… Vetri vilainthathamma… Chorus Azhagukku azhgu seivom Karpin amuthinai alangarippom Amuthinai alangarippom Azhagukku azhgu seivom Karpin amuthinai alangarippom Amuthinai alangarippom Chorus Sempanju poosiya paadhaththil Siru viral mothiram valaiththu vaippom Sempanju poosiya paadhaththil Siru viral mothiram valaiththu vaippom Ambinum kooriya kangalilae Anjana maiyittu azhagu seivom Chorus Amuthinai alangarippom Azhagukku azhgu seivom Karpin amuthinai alangarippom Amuthinai alangarippom Male Part
Vaiyam nilaiyariya Mannaargal unaiyariya Vaiyam…..mmm…..nilaiyariya Mannaargal unaiyariya Aiyam marainthupada Anaiththulagam paninthu vara Poi thavirntha naermai Ponmalaraam jaanagiyai Nei valarththa theeyil Neenthi vara aanaiyittaen… Aanaiyittaen… Female Part Neruppinai nerupae neeyum Nerunguthal iyalumaayin Neriya enathu maeni Nerunguga neruppae indru Female Part Marupena thiranda tholin Mannavan kan munnaalae Mai kuzhal malaraiyenum Erippaiyo nerupae vaa…. Erippaiyo nerupae vaa…. Erippaiyo nerupae vaa…. Chorus Kaana vendum latcham kangal Kaana vendum latcham kangal Seethaa deviyin kaalukku nigaro pengal Kaana vendum latcham kangal Seethaa deviyin kaalukku nigaro pengal Kaana vendum latcham kangal Chorus Navaraththina thangaththodu Nadaiyilae annappaedu Navaraththina thangaththodu Nadaiyilae annappaedu Avanukku illai eedu Avanukku avalae eedu Chorus Kaana vendum latcham kangal
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா, கமலா மற்றும் தங்கப்பன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகியை...... இலங்கையற் கோன் களவு சூழ்ந்த கள்ளமற ஸ்ரீராமன் களங் கொண்டு கை வளைத்துத் தொடுத்த வாளி ஆண் : உள்ளிருக்கும் உயிர் கொண்டு இலங்கையற் கோன் உடலை வெறுங்கூடு செய்து வெள்ளமெனக் குருதி வரத் தர்மத்தின் வெற்றி வர விளைத்ததம்மா......ஆ.....ஆ..... வெற்றி விளைந்ததம்மா.... வெற்றி விளைந்ததம்மா.... குழு : அழகுக்கு அழகு செய்வோம் கற்பின் அமுதினை அலங்கரிப்போம் அமுதினை அலங்கரிப்போம் அழகுக்கு அழகு செய்வோம் கற்பின் அமுதினை அலங்கரிப்போம் அமுதினை அலங்கரிப்போம் குழு : செம்பஞ்சு பூசிய பாதத்திலே சிறுவிரல் மோதிரம் வளைத்து வைப்போம் செம்பஞ்சு பூசிய பாதத்திலே சிறுவிரல் மோதிரம் வளைத்து வைப்போம் அம்பினும் கூறிய கண்களிலே அஞ்சன மையிட்டு அழகு செய்வோம் குழு : அமுதினை அலங்கரிப்போம் அழகுக்கு அழகு செய்வோம் கற்பின் அமுதினை அலங்கரிப்போம் அமுதினை அலங்கரிப்போம் ஆண் : வையம் நிலையறிய மன்னவர்கள் உனையறிய வையம்......ம்ம்ம்ம்...... நிலையறிய மன்னவர்கள் உனையறிய ஐயம் மறைந்துபட அனைத்துலகம் பணிந்து வர பொய் தவிர்ந்த நேர்மை பொன்மலராம் ஜானகியை நெய் வளர்த்த தீயில் நீந்திவர ஆணையிட்டேன்.... ஆணையிட்டேன்........ பெண் : நெருப்பினை நெருப்பே நீயும் நெருங்குதல் இயலுமாயின் நேரிய எனது மேனி நெருங்குக நெருப்பே இன்று பெண் : மருப்பெனத் திரண்ட தோளின் மன்னவன் கண் முன்னாலே மை குழல் மலரையேனும் எரிப்பையோ நெருப்பே வா...... எரிப்பையோ நெருப்பே வா...... எரிப்பையோ நெருப்பே வா...... குழு : காண வேண்டும் லட்சம் கண்கள்....... காண வேண்டும் லட்சம் கண்கள்.... சீதா தேவியின் காலுக்கு நிகரோ பெண்கள் காண வேண்டும் லட்சம் கண்கள்..... சீதா தேவியின் காலுக்கு நிகரோ பெண்கள் காண வேண்டும் லட்சம் கண்கள்..... குழு : நவரத்தின தங்கத்தோடு நடையிலே அன்னப்பேடு நவரத்தின தங்கத்தோடு நடையிலே அன்னப்பேடு அவனுக்கு இல்லை ஈடு அவனுக்கு அவளே ஈடு குழு : காண வேண்டும் லட்சம் கண்கள்.......
Song information
Singers: P. Leela, Kamala and Thangappan
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Leela
- Singer: Kamala and Thangappan
- Film / album: Kalyaniyin Kanavan
- Composer: S. M. Subbaih Naidu