Roman script
Singer : Vijay Yesudas Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male Part O o ..oo..oo.. Oo ..oo..ooo… Male Part Kalangudhae kann kalangudhae Kadhariyae nenju norungudhae Ponga vecha thangakudam Pothalu vitturichae Maasariya vairamani Mannula saainjiruchae Male Part Aricane vilakkae Iruttaayiruchae Pasumpal veluppae Karuppayiruchae Male Part Kammakarai aayiruchae Kattandharai ooo Kanneerula sainjiruchae Senthamarai Male Part Mutti mutti ooru sanam Munnae vara ooo Mukkathula ninnuduchae Moonampirai ..oo Male Part Pulakadaiyilae mulachaalum Thulasikku oru vaasam Theru puludhiyilae purandaalum Vaazhumae nesam Male Part Kodi aduppula puga pola Posungudhu oru koottam Kalaiyeduthida thuninjaalae Kaalam maaridum Male Part Vayakkattula ulacha naanga Endha paadamum padikkala Nidham saethula kidakkuromae Adha saamiyum thadukkala Male Part Kaasa kekkum kalvi Kanavaagi ponadhae Neeru mela potta Oru kolam aanadhae Male Part Kaadharundha oosiyilae Sattaiya thaikkanuma Kaiya katti vaaya pothi Naangalum nikkanuma Male Part Thalaiyeluthae puriyalunnu Oppari veikkanuma Male Part Kammakarai aayiruchae Kattandharai ooo Kanneerula sainjiruchae Senthamarai Male Part Mutti mutti ooru sanam Munnae vara ooo Mukkathula ninnuduchae Moonampirai ..oo
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : ஓஓ… ஓஓ.. ஓஓ.. ஓஓ… ஓஓ.. ஓஓ.. ஆண் : கலங்குதே! கண்கள் கலங்குதே! கதறியே நெஞ்சம் நொறுங்குதே! பொங்க வச்ச தங்ககுடம் பொத்தலு விட்டுறிச்சே மாசறியா வைரமணி மண்ணலு சாய்ஞ்சிரிச்சே ஆண் : அரிக்கேன் விளக்கே இருட்டாயிறுச்சே! பசும்பால் வெளுப்பே கருப்பாயிறுச்சே! ஆண் : கம்மாக்கரை ஆயிருச்சே கட்டாந்தரை ஓ… கண்ணீருல சாய்ஞ்சிருச்சு செந்தாமரை ஆண் : முட்டி முட்டி ஊரு ஜனம் முன்னே வர ஓ… முக்கத்துலு நின்னுடுச்சே மூணாம்பிறை ஓ… ஆண் : புழக்கடையில முளச்சாலும் துளசிக்கு ஓரு வாசம் தெருப் புழுதியில் புரண்டாலும் வாழுமே நிசம் ஆண் : கொடி அடுப்புல புகப்போல பொசுங்கு ஒரு கூட்டம் களையெடுத்திட துணிஞ்சாலே காலம் மாறிடும் ஆண் : வயக்காட்டுல முளச்ச நாங்க எந்த பாடமும் படிக்கல நிதம் சேத்துல கிடக்குறோமே அத சாமியும் தடுக்கல ஆண் : காச கேக்கும் கல்வி கனவாகி போனதே! நீரு மேல போட்ட ஒரு கோலமானதே! ஆண் : காதறுந்த ஊசியிலே சட்டைய தைகக்கனுமா! கைய கட்டி வாய பொத்தி நாங்களும் நிக்கனுமா! ஆண் : தலையெழுத்தே புரியலனு ஒப்பாரி வைக்குனுமா! ஆண் : கம்மாக்கரை ஆயிருச்சே கட்டாந்தரை ஓ… கண்ணீருல சாய்ஞ்சிருச்சு செந்தாமரை ஆண் : முட்டி முட்டி ஊரு ஜனம் முன்னே வர ஓ… முக்கத்துலு நின்னுடுச்சே மூணாம் பிறை ஓ…
Song information
Singer: Vijay Yesudas
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Yugabharathi
Release information: From Vaathi (2022) · Singer: Vijay Yesudas · Lyricist: Yugabharathi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Vaathi
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Yugabharathi