Roman script

Singer : Srinivas

Music by : Vidyasagar

Male Part

Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae

Engae vilundhaayo

Kannil unnai kaanum

Munnae mannil olindhaayo

Male Part

Alaindhu unnai adaivathu

Vaazhvil saathiyamaa

Naan nadandhu konde

Erivadhu unaku sammadhamaa

Male Part

Adi unaku manadhilae

En ninaipu irukumaa….aaaa

Male Part

Vaazhndha vaazhvenakum

Vaazhum naatkalukum

Porulae neethaan uyire vaaraai

Male Part

Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae

Engae vilundhaayo..ooo vilundhaayo-ooo … ooo hooo

Male Part

Kannil oru thuli neer

Mella kazhandru vilundhadhu yen

Male Part

Vinnil oru vinmeen

Satru visumbi azhuthadhuthaan

Male Part

Ullangai kadanthu engo

Ozhugiya nimidangalai

Mella sirai seiyavae

Kaadhal meendum padhivu seithen

Male Part

Vaazhndha vaazhvenakum

Vaazhum naatkalukum

Porulae neethaan uyire vaaraai

Male Part

Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae

Engae vilundhaayo

Male Part

Sangil kudhithuvida

Oru samudhiram ninaipathupol

Angam niraindhuvida

En aavi thudithadhuthaan

Male Part

Thedi kidaipathillai

Endru therindha oru porulai

Thedi paarpathendru

Mei thedal thodangiyathae

Male Part

Vaazhndha vaazhvenakum

Vaazhum naatkalukum

Porulae neethaan uyire vaaraai …uyire vaaraai

En uyire vaaraai

Male Part

{ Kaadhal ….kaadhal ….kaadhal …..kaadhal

Kaadhal ….kaadhal ….kaadhal

Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae

Engae vilundhaayo

Kannil unnai kaanum

Munnae mannil olindhaayo } (2)

Male Part

Alaindhu unnai adaivathu

Vaazhvil saathiyamaa

Naan nadandhu konde

Erivadhu unaku sammadhamaa

Male Part

Adi unaku manadhilae

En ninaipu irukumaa

Male Part

Vaazhndha vaazhvenakum

Vaazhum naatkalukum

Porulae neethaan uyire vaaraai

Vaaraai ….. vaaraai

Male Part

…………………………………………

தமிழ்

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : காதல் மழையே

காதல் மழையே எங்கே

விழுந்தாயோ கண்ணில்

உன்னைக் காணும் முன்னே

மண்ணில் ஒளிந்தாயோ

ஆண் : அலைந்து உன்னை

அடைவது வாழ்வில் சாத்தியமா

நான் நடந்துகொண்டே எரிவது

உனக்கு சம்மதமா

ஆண் : அடி உனக்கு

மனதிலே என் நினைப்பு

இருக்குமா........

ஆண் : வாழ்ந்த

வாழ்வெனக்கும்

வாழும் நாட்களுக்கும்

பொருளே நீதான் உயிரே

வாராய்

ஆண் : காதல் மழையே

காதல் மழையே எங்கே

விழுந்தாயோ.....

விழுந்தாயோ.....ஓ ஹோ

ஆண் : கண்ணில் ஒரு

துளிநீர் மெல்லக் கழன்று

விழுந்தது ஏன்

ஆண் : விண்ணில் ஒரு

விண்மீன் சற்று விசும்பி

அழுதது தான்

ஆண் : உள்ளங்கை கடந்து

எங்கோ ஒழுகிய நிமிடங்களை

மெல்லச் சிறைசெய்யவே காதல்

மீண்டும் பதிவு செய்தேன்

ஆண் : வாழ்ந்த

வாழ்வெனக்கும்

வாழும் நாட்களுக்கும்

பொருளே நீதான் உயிரே

வாராய்

ஆண் : காதல் மழையே

காதல் மழையே எங்கே

விழுந்தாயோ

ஆண் : சங்கில் குதித்து

விட ஒரு சமுத்திரம்

நினைப்பதுபோல் அங்கம்

நிறைந்துவிட என் ஆவி

துடித்தது தான்

ஆண் : தேடிக் கிடைப்பதில்லை

என்று தெரிந்த ஒரு பொருளை

தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல்

தொடங்கியதே

ஆண் : வாழ்ந்த

வாழ்வெனக்கும்

வாழும் நாட்களுக்கும்

பொருளே நீதான் உயிரே

வாராய் உயிரே வாராய்

என் உயிரே வாராய்

ஆண் : { காதல் காதல்

காதல் காதல் காதல்

காதல் காதல் காதல் மழையே

காதல் மழையே எங்கே

விழுந்தாயோ கண்ணில்

உன்னைக் காணும் முன்னே

மண்ணில் ஒளிந்தாயோ } (2)

ஆண் : அலைந்து உன்னை

அடைவது வாழ்வில் சாத்தியமா

நான் நடந்துகொண்டே எரிவது

உனக்கு சம்மதமா

ஆண் : அடி உனக்கு

மனதிலே என் நினைப்பு

இருக்குமா

ஆண் : வாழ்ந்த

வாழ்வெனக்கும்

வாழும் நாட்களுக்கும்

பொருளே நீதான் உயிரே

வாராய் வாராய் வாராய்

ஆண் : ...............................

Song information

Singer: Srinivas

Music by: Vidyasagar

Release information: From Jay Jay (2003) · Lyricist: Vairamuthu

Explore this song