Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Vijay Anand Lyrics by : Idhaya Chandran Male Part Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Female : Pudhu maadhulai tharum thaen suvai Dhinam bhoopaalam paadumo…oo…oo…. Male Part Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Male Part Un maenithaan pon veenaiyo Naan meetta varavo Female : Nee meettavo en meniyai Un kaiyil tharavo Male Part Nee pongi varum gangai nadhi En manjam varum sindhu nadhi Female : Nee mella vanthu ennaiththoda En selai konajam vetkam vida Male : Idhazh velukkum udal silirkkum Antha mayakkam namai dhinam azhaikkum Male Part Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Female : Pudhu maadhulai tharum thaen suvai Dhinam bhoopaalam paadumo…oo…oo…. Female Part Pon maalaiyil poochchooduvaen Un tholil vizhuven Male : Thaai polavae naal thorumae Thaalaatta varuvaen Female Part Nee solliththarum palliyil naan Adhikaalai varai maanavithaan Male : Naan un madiyil pillaiyadi Nee allitharum vallaladi Female : Uyir udalil ulla varaikkum Intha nerukkam endrum thodarnthirukkum Male Part Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Female : Pudhu maadhulai tharum thaen suvai Dhinam bhoopaalam paadumo…oo…oo…. Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : இதயசந்திரன் ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ.... ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ.... ஆண் : உன் மேனிதான் பொன்வீணையோ நான் மீட்ட வரவோ பெண் : நீ மீட்டவே என் மேனியை உன் கையில் தரவோ ஆண் : நீ பொங்கி வரும் கங்கை நதி என் மஞ்சம் வரும் சிந்து நதி பெண் : நீ மெல்ல வந்து என்னைத்தொட என் சேலை கொஞ்சம் வெட்கம் விட ஆண் : இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும் அந்த மயக்கம் நமை தினம் அழைக்கும் ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ.... பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ.... பெண் : பொன் மாலையில் பூச்சூடுவேன் உன் தோளில் விழுவேன் ஆண் : தாய் போலவே நாள்தோறுமே தாலாட்ட வருவேன் பெண் : நீ சொல்லித்தரும் பள்ளியில் நான் அதிகாலை வரை மாணவிதான் ஆண் : நான் உன் மடியில் பிள்ளையடி நீ அள்ளிதரும் வள்ளலடி பெண் : உயிர் உடலில் உள்ள வரைக்கும் இந்த நெருக்கம் என்றும் தொடர்ந்திருக்கும் ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ.... இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ.... பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ.... இருவர் : ......................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Vijay Anand
Lyrics by: Idhaya Chandran
Release information: From Vaai Sollil Veeranadi (1984) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Idhaya Chandran · Music: Vijay Anand
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Vaai Sollil Veeranadi
- Composer: Vijay Anand
- Lyricist: Idhaya Chandran