Roman script

Singers : P. U. Chinnappa and P. Bhanumathi

Music by : G. Ramanathan and C. R. Subbaraman

Male Part

Ganavaangalae vaango

Kandu kalithu pongo

Ganavaangalae vaango

Kandu kalithu pongo

Female Part

Nam aattangal paarthu magizhndhu

Panam eduthu thaango

Nam aattangal paarthu magizhndhu

Panam eduthu thaango

Ganavaangalae vaango

Kandu kalithu pongo

Male Part

Paambai eduthadhai kaattiduvom

Female Part

Poo naagamum kon daattiduvom

Male Part

Nalla paambai eduthadhai kaattiduvom

Female Part

Poo naagamum kon daattiduvom

Female Part

Sennira naagamum kaattiduvom

Semponnudan kaasum podungao

Sennira naagamum kaattiduvom

Semponnudan kaasum podungao

Male Part

Ganavaangalae vaango

Kandu kalithu pongo

Ganavaangalae vaango

Kandu kalithu pongo

Male Part

Vaanuyarndha peru valli maa malaiyil

Vaazhn dhirundhom naamae

Angu maanudan mazhuvum konda

Eesan vara kando dhungi vandhom

Female Part

Aam

Male Part

Thaenum paalum abishaegam kol

Pazhani aandavan malai sendrom

Angu kaanum kaavadiyum sangu naadhamum

Aragaraa enum oliyum

Female Part

Aam haam

Male Part

Kaadhai thulaikkavae sendhamizhagathiyar

Podhiyamalaiyil vandhom

Female Part

Aamaam

Male Part

Odhidum pala kodu noigal

Odidumpadiyae seiyum

Pachilai yundu vaergalu mundu

Vaendiya nalla marundhugal undu

Female Part

Undu… undu… undu… undu…

Female Part

Vaango aattam paarthittu pongo

Vaango aattam paarthittu pongo

Both : Ganavaangalae vaango

Kandu kalithu pongo

Ganavaangalae vaango

Kandu kalithu pongo

தமிழ்

பாடகர்கள் : பு. உ. சின்னப்பா மற்றும் பி. பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்

ஆண் : கனவான்களே வாங்கோ

கண்டு களித்துப் போங்கோ

கனவான்களே வாங்கோ

கண்டு களித்துப் போங்கோ

பெண் : நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து

பணம் எடுத்துத் தாங்கோ

நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து

பணம் எடுத்துத் தாங்கோ

கனவான்களே வாங்கோ

கண்டு களித்துப் போங்கோ

ஆண் : பாம்பை எடுத்ததை காட்டிடுவோம்

பெண் : பூ நாகமும் கொண்டாட்டிடுவோம்

ஆண் : நல்ல பாம்பை எடுத்ததை காட்டிடுவோம்

பெண் : பூ நாகமும் கொண்டாட்டிடுவோம்

பெண் : செந்நிற நாகமும் காட்டிடுவோம்

செம்பொன்னுடன் காசும் போடுங்கோ

செந்நிற நாகமும் காட்டிடுவோம்

செம்பொன்னுடன் காசும் போடுங்கோ

ஆண் : கனவான்களே வாங்கோ

கண்டு களித்துப் போங்கோ

கனவான்களே வாங்கோ

கண்டு களித்துப் போங்கோ

ஆண் : வானுயர்ந்த பெரு வள்ளி மா மலையில்

வாழ்ந்திருந்தோம் நாமே

அங்கு மானுடன் மழுவும் கொண்ட

ஈசன் வரக் கண்டொ துங்கி வந்தோம்

பெண் : ஆம்

ஆண் : தேனும் பாலும் அபிஷேகம் கொள்

பழநி ஆண்டவன் மலை சென்றோம்

அங்கு காணும் காவடியும் சங்கு நாதமும்

அரகரா எனும் ஒலியும்

பெண் : ஆம் ஹாம்

ஆண் : காதைத் துளைக்கவே செந்தமிழகத்தியர்

பொதியமலையில் வந்தோம்

பெண் : ஆமாம்

ஆண் : ஓதிடும் பல கொடு நோய்கள்

ஓடிடும்படியே செய்யும்

பச்சிலை யுண்டு வேர்களு முண்டு

வேண்டிய நல்ல மருந்துகள் உண்டு

பெண் : உண்டு......உண்டு......உண்டு......உண்டு

பெண் : வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ

வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ

இருவர் : கனவான்களே வாங்கோ

கண்டு களித்துப் போங்கோ

கனவான்களே வாங்கோ

கண்டு களித்துப் போங்கோ

Song information

Singers: P. U. Chinnappa and P. Bhanumathi

Music by: G. Ramanathan and C. R. Subbaraman

Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan

Explore this song