Roman script

Singers : P. Susheela and S.P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Female Part

Ennodu ennennavo ragasiyam

Unnodu solla vendum avasiyam

Ennodu ennennavo ragasiyam

Unnodu solla vendum avasiyam

Male Part

Sollathaan aasai thudikindratho

Achcham thadukindratho

Female Part

Nalliravil mella mellidai killu

Arthamenna ariven kanna

Andharangam solla thandhirangal undu

Naan enna ariyaa penna….

Male Part

Paadam iruttil koorum

Baashai udhattin oosai

Paadam iruttil koorum

Baashai udhattin oosai

Naangu vizhi allavo

Paesum mozhi allavo

Male Part

Ennodu ennennavo ragasiyam

Unnodu solla vendum avasiyam

Female Part

Sollathaan vegam pirakindratho

thaagam edukindratho

Male Part

Haa…..aa….

Female : Laala laala laaa

Male : Lalalalala

Female : Laa laa laa

Male : Laa laa laa

Female Part

Sangamathil naanum

Seidha pizhai yaavum

Mannikkindra manam vendumae

Kungumathil vaazhum kola magal endru

Paarattum gunam vendumae

Male Part

Janakiyai raman sodhanaigal seidhaan

Andha ullam enakkillaiyae

Naanarindha seethai paavam oru pedhai

Poo pondra siru pillaiyae

Female Part

Paadal pirakum podhu

Male : Oodal namakkul yaedhu

Female : Paadal pirakum podhu

Male : Oodal namakkul yaedhu

Female : Vaazhum uravallavo

Male : Ondru uyir allavo

Female Part

Ennodu ennennavo ragasiyam

Unnodu solla vendum avasiyam

Male Part

Sollathaan aasai thudikindratho

Achcham thadukindratho

Both : Haa…aaa…aa….

Haa…..aa…..aaa….

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பெண் : என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

ஆண் : சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ

பெண் : நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு

அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா

அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு

நான் என்ன அறியா பெண்ணா

ஆண் : பாடம் இருட்டில் கூறும்

பாஷை உதட்டின் ஓசை

பாடம் இருட்டில் கூறும்

பாஷை உதட்டின் ஓசை

நான்கு விழியல்லவோ

பேசும் மொழியல்லவோ

ஆண் : என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

பெண் : சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ

தாகம் எடுக்கின்றதோ

ஆண் : ஹா.....ஆ.....

பெண் : லால லால லா

ஆண் : லாலலலல

பெண் : லா லா லா

ஆண் : லா லா லா

பெண் : சங்கமத்தில் நானும்

செய்த பிழை யாவும்

மன்னிக்கின்ற மனம் வேண்டுமே

குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று

பாராட்டும் குணம் வேண்டுமே

ஆண் : ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான்

அந்த உள்ளம் எனக்கில்லையே

நான் அறிந்த சீதை பாவம் ஒரு பேதை

பூப் போன்ற சிறுப் பிள்ளையே

பெண் : பாடல் பிறக்கும் போது

ஆண் : ஊடல் நமக்குள் ஏது

பெண் : பாடல் பிறக்கும் போது

ஆண் : ஊடல் நமக்குள் ஏது

பெண் : வாழும் உறவல்லவோ

ஆண் : ஒன்று உயிரல்லவோ

பெண் : என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

ஆண் : சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ

இருவர் : ஹா.....ஆஅ.....ஆ.....

ஹா.....ஆஅ.....ஆ.....

Song information

Singers: P. Susheela and S.P. Balasubrahmanyam

Music by: V. Kumar

Release information: From Thoondil Meen (1977) · Lyricist: Vaali

Explore this song