Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Aa…..aaa…..aaa….aaa….aa…. Aa…..aaa…..aaa….aaa….aa…. Female Part Enai nee paadaathae thalaivaa naan un paattalla Enai nee thedaathae naan un paattin porulalla Naan paadum paamaalai unai seralaam Naan soodum poomaalai idam maaralaam Female Part Enai nee paadaathae thalaivaa naan un paattalla Thalaivaa naan un paattalla Female Part Naanoru kaaviri kadal sera vanthaen Naayagan nee endru nizal thedi nindraen Aayinum vidhi ingu anai poda kandaen Aandavan thiruvullam dhisai maari sendraen Female Part Yaar vasam yaar endru yaar solvatho Oorvalam edhuvendru thaer solvatho Oomai naanthaan Sogamo raagamaai keerthanam aaga Female Part Enai nee paadaathae thalaivaa naan un paattalla Enai nee thedaathae naan un paattin porulalla Female Part Kalyaana aasai kaikoodum endru Poomaalai ondru thoduthaen Paathai maaraatha payanamthaan endru Kadhal sangeetham padiththaen Female Part Kalyaana aasai kaikoodum endru Poomaalai ondru thoduthaen Paathai maaraatha payanamthaan endru Kadhal sangeetham padiththaen Female Part Naan konda ninaivu theigindra nilavu Nee thantha uravu naan kanda kanavu Anbil inainthathu aadi mudinthathu Paadal piranthathu paadi mudinthathu ammammaa Female Part Aa….aaa….aaa….aaa….aa…. Aa….aa….aa….aa….aa….aaa….aa….. Enai nee paadaathae…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ.... ஆ.....ஆ....ஆ......ஆ....ஆ.....ஆ..... பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல நான் பாடும் பாமாலை உனைச் சேரலாம் நான் சூடும் பூமாலை இடம் மாறலாம் பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல தலைவா நான் உன் பாட்டல்ல பெண் : நானொரு காவேரி கடல் சேர வந்தேன் நாயகன் நீ என்று நிழல் தேடி நின்றேன் ஆயினும் விதி இங்கு அணை போட கண்டேன் ஆண்டவன் திருவுள்ளம் திசை மாறிச் சென்றேன் பெண் : யார் வசம் யார் என்று யார் சொல்வதோ ஊர்வலம் எதுவென்று தேர் சொல்வதோ ஊமை நான் தான் சோகமே ராகமாய் கீர்த்தனம் ஆக பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல பெண் : கல்யாண ஆசை கைகூடும் என்று பூமாலை ஒன்று தொடுத்தேன் பாதை மாறாத பயணம்தான் என்று காதல் சங்கீதம் படித்தேன் பெண் : கல்யாண ஆசை கைகூடும் என்று பூமாலை ஒன்று தொடுத்தேன் பாதை மாறாத பயணம்தான் என்று காதல் சங்கீதம் படித்தேன் பெண் : நான் கொண்ட நினைவு தேய்கின்ற நிலவு நீ தந்த உறவு நான் கண்ட கனவு அன்பில் இணைந்தது ஆடி முடிந்தது பாடல் பிறந்தது பாடி முடிந்தது அம்மம்மா பெண் : ஆ....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ.... ஆ.....ஆ....ஆ......ஆ....ஆ.....ஆ.....ஆஅ....ஆ..... எனை நீ பாடாதே.....
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Maragatha Veenai (1986) (1986) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Maragatha Veenai (1986)
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali