Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part En manadhu ondru thaan Un meedhu njaabagam Vaan nilavu ondru thaan Vaan meedhu sathiyam Female Part En manadhu ondru thaan Un meedhu njaabagam Vaan nilavu ondru thaan Vaan meedhu sathiyam Male Part Pon maalai soodum thaaram Poo choodum kaalam saerum Pon maalai soodum thaaram Poo choodum kaalam saerum Dheivangal saatchiyaai kalyaanam nichayam Dheivangal saatchiyaai kalyaanam nichayam Female Part En manadhu ondru thaan Un meedhu njaabagam Vaan nilavu ondru thaan Vaan meedhu sathiyam Female Part Pon muthu maalaiyaavaen Un methai maarbil saaiven Kai thotta idamellaam kaniyudhae kaaviyam Male Part Oru kattu poovaip polae Udal kattu konda paavai En sondham aagiraal nadakkudhae naadagam Male Part En manadhu ondru thaan Un meedhu njaabagam Vaan nilavu ondru thaan Vaan meedhu sathiyam Female Part Naan maalai nera thogai Nee maari kaala megam Megangal maarinum thogai thaan maarumo Male Part Idhu dhaeva loga raagam Nam aayutkaala geedham Both : Idhu dhaeva loga raagam Nam aayutkaala geedham Bhaavangal maaralaam kaadhal thaan maarumo Female Part En manadhu ondru thaan Un meedhu njaabagam Vaan nilavu ondru thaan Vaan meedhu sathiyam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம் வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம் பெண் : என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம் வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம் ஆண் : பொன் மாலை சூடும் தாரம் பூச்சூடும் காலம் சேரும் பொன் மாலை சூடும் தாரம் பூச்சூடும் காலம் சேரும் தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம் தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம் பெண் : என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம் வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம் பெண் : பொன் முத்து மாலையாவேன் உன் மெத்தை மார்பில் சாய்வேன் கை தொட்ட இடமெல்லாம் கனியுதே காவியம் ஆண் : ஒரு கட்டுப் பூவைப் போலே உடல் கட்டுக் கொண்ட பாவை என் சொந்தம் ஆகிறாள் நடக்குதே நாடகம் ஆண் : என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம் வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம் பெண் : நான் மாலை நேரத் தோகை நீ மாரிக் கால மேகம் மேகங்கள் மாறினும் தோகைதான் மாறுமோ ஆண் : இது தேவ லோக ராகம் நம் ஆயுட்கால கீதம் இருவர் : இது தேவ லோக ராகம் நம் ஆயுட்கால கீதம் பாவங்கள் மாறலாம் காதல்தான் மாறுமோ பெண் : என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம் வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Avan Oru Sarithiram (1977) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Avan Oru Sarithiram
- Composer: M. S. Vishwanathan