Roman script
Singer : P. B. Srinivas Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo Kannirandum thaamaraiyo Kannam minnum endhan kannaa Male Part Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo Male Part Paal manakkum paruvathilae Unnai pol naan irundhen Pattaadai thottililae Chittu pol paduthirundhen An naalai ninaikkaiyilae En vayadhu maarudhadaa Unnudan aadi vara ullamae thaavudhadaa Male Part Kannirandum thaamaraiyo Kannam minnum endhan kannaa Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo Male Part Oruvarin thudippinilae Vilaivadhu kavidhaiyadaa Iruvarin thudippinilae Vilaivadhu mazhalaiyadaa Eer ezhu mozhighalilae Enna mozhi pillai mozhi Kallamatra vellai mozhi Dhevan thandha dheiva mozhi Male Part Kannirandum thaamaraiyo Kannam minnum endhan kannaa Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo Male Part Poo pondra nenjinilum Mullirukkum boomiyadaa… Pollaadha kangaladaa Punnagaiyum veshamadaa Male Part Nandri ketta maandharadaa Naanarindha paadamadaa Nandri ketta maandharadaa Naanarindha paadamadaa Pillaiyaai irundhu vittaal Illai oru thunbamadaa Male Part Kannirandum thaamaraiyo Kannam minnum endhan kannaa Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா ஆண் : சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ ஆண் : பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன் பட்டாடை தொட்டிலிலே சிட்டு போல் படுத்திருந்தேன் அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா ஆண் : கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ ஆண் : ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா ஆண் : ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வ மொழி ஆண் : கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ ஆண் : பூ போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா... பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா......ஆ ஆண் : பூ போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா... பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா......ஆ ஆண் : நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா ஆண் : கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
Song information
Singer: P. B. Srinivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Vaazhkai Padagu (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Srinivas
- Film / album: Vaazhkai Padagu
- Composer: Vishwanathan-Ramamoorthy