தமிழ்

பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஹஹா ஓஹோஹோ
ஆஆஆ ஓஓஒ
ஆஹஹா ஓஹோஹோ
பெண் : வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா
பெண் : வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா
பெண் : பார்க்கத் தெரிந்தால்
பாதை தெரியும்
பார்த்து நடந்தால்
பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால்
கதவு திறக்கும்
கதவு திறந்தால்
காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால்
கவலை தீரும்
கவலை தீர்ந்தால்
வாழலாம்
பெண் : வாழ நினைத்தால்
வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா
ஆண் : கண்ணில் தெரியும்
வண்ணப் பறவை
கையில் கிடைத்தால்
வாழலாம்
கருத்தில் வளரும்
காதல் எண்ணம்
கனிந்து வந்தால்
வாழலாம்
கன்னி இளமை
என்னை அணைத்தால்
தன்னை மறந்தே
வாழலாம்
ஆண் : வாழச் சொன்னால்
வாழ்கிறேன்
மனமா இல்லை வாழ்வினில்
ஆழக் கடலில்
தோணி போலே
அழைத்துச் சென்றால்
வாழ்கிறேன்
பெண் : ஏரிக் கரையில்
மரங்கள் சாட்சி
ஆண் : ஏங்கித் தவிக்கும்
இதயம் சாட்சி
பெண் : துள்ளித் திரியும்
மீன்கள் சாட்சி
ஆண் : துடித்து நிற்கும்
இளமை சாட்சி
பெண் : இருவர் வாழும்
காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்
ஆண் & பெண் : வாழ நினைத்தோம்
வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில்
தோணி போலே
காலம் முழுதும்
நீந்துவோம்
பெண்: ஆஆஆ ஆஆஆ
ஆண் : வாழ நினைத்தோம்
வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில்
தோணி போலே
காலம் முழுதும்
நீந்துவோம்

Song details

படம்: பலே பாண்டியா (1962)

பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

இயற்றியவர்: கண்ணதாசன்

Album: பலே பாண்டியா

Song video

Watch on YouTube