Roman script

Singer : P. Leela

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : M. S. Balasubramaniyam

Female Part

Azhuthu azhuthu sornthathaiyaa paappa

Azha iyalaadhu kannum moodinadho paappa

Thaazhavae iyalaadha kodum pasiyaalae

Female Part

Vazhiyae illaiyaa vaazha vazhiyae illaiyaa

Ilam seiyin kodum paasi theera

Vazhiyae illaiyaa vaazha vazhiyae illaiyaa

Female Part

Poonavae thangamum nagai kettara

Vaazhndhida maaligai yedhum kettara

Theerappasi pini theera kanjiyae podhum endraalum

Vazhiyae illaiyaa vaazha vazhiyae illaiyaa

Female Part

Kodiya pasiyinaal yengum pillaikku

Kadhaigal sollinum nithirai poguma

Paalukku badhil en kaneer thandhaal

Kodum pasi theerndhiduma

Female Part

Vazhiyae illaiyaa vaazha vazhiyae illaiyaa

Ilam seiyin kodum paasi theera

Vazhiyae illaiyaa vaazha vazhiyae illaiyaa

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம்

பெண் : அழுது அழுது சோர்ந்ததையோ பாப்பா

அழ இயலாது கண்ணும் மூடினதோ பாப்பா

தாழவே இயலாத கொடும் பசியாலே

பெண் : வழியே இல்லையா வாழ வழியே இல்லையா

இளம் சேயினின் கொடும் பசி தீர

வழியே இல்லையா வாழ வழியே இல்லையா..

பெண் : பூணவே தங்கமும் நகை கேட்டாரா

வாழ்ந்திட மாளிகை ஏதும் கேட்டாரா

தீராப் பசிப்பிணி தீரக் கஞ்சியே போதுமென்றாலும்

வழியே இல்லையா வாழ வழியே இல்லையா..

பெண் : கொடிய பசியினால் ஏங்கும் பிள்ளைக்கு

கதைகள் சொல்லினும் நித்திரை போகுமா

பாலுக்கு பதில் என் கண்ணீர் தந்தால்

கொடும் பசி தீர்ந்திடுமா.......

பெண் : வழியே இல்லையா வாழ வழியே இல்லையா

இளம் சேயினின் கொடும் பசி தீர

வழியே இல்லையா வாழ வழியே இல்லையா..

Song information

Singer: P. Leela

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: M. S. Balasubramaniyam

Release information: From Kudumbam (1954) · Singer: P. Leela · Lyricist: M. S. Balasubramaniyam · Music: Pendyala Nageswara Rao

Explore this song