Roman script

Singer : Sunandhan

Music by : Alan Menken

Male Part

Undhan karpanaiyil

Sudu paalaiyin mel

Oru ottagathil pogindrom

Male Part

Idhu yaar nilamo

Evar aazhgiraaroo

Ennaalumae vaa selvom

Male Part

Thendral kizhakkirundhu

Veiyil merkirundhu

Andha mann angu minnidum paar

Male Part

Naam angae povomaa…

Maaya kambali mel

Arabiya iravinilae…..

Male Part

Andha therukkalilae

Naamum parakkaiyilae

Namm vaasathil yelakkaai

Manam veesum kadai

Panam pesum udai

Indha pattudai yaarukkaai….

Male Part

Manam allum isai

Puriyaadhu dhisai

Madhi mayakkum nilaavinilae…

Male Part

Edhu unmai ingae

Edhu kanavu ingae

Arabiya iravinilae

Male Part

Arabiya yaamam

Pagal pola thondrum

Oo eppodhumae

Oo soodaagavae

Orr vaazhkkai ingae….

Male Part

Arabiya yaamam

Kanavai pola thondrum

Vinnil mannilae

Unnil ennilae

Maayam kannilae…

Male Part

Indha paadhai ingae

Nanmai peraasai endru

Rendaagi pogum podhilae…

Male Part

Irul yaavum neekka

Mudivenna paarkka

Undhan vaazhkkai undhan kaiyilae

தமிழ்

பாடகர் : சுனந்தன்

இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன்

ஆண் : உந்தன் கற்பனையில்

சுடு பாலையின் மேல்

ஒரு ஒட்டகத்தில் போகின்றோம்

ஆண் : இது யார் நிலமோ

எவர் ஆள்கிறரோ

என்னானாலுமே வா செல்வோம்

ஆண் : தென்றல் கிழக்கிருந்து

வெய்யில் மேற்கிருந்து

அந்த மண் அங்கு மின்னிடும் பார்

ஆண் : நாம் அங்கே போவோமா....

மாயக் கம்பளி மேல்

அரேபிய இரவினிலே.....

ஆண் : அந்தத் தெருக்களிலே

நாமும் பறக்கையிலே

நம் வாசத்தில் ஏலக்காய்

மணம் வீசும் கடை

பணம் பேசும் உடை

இந்தப் பட்டுடை யாருக்காய்.....

ஆண் : மனம் அள்ளும் இசை

புரியாது திசை

மதி மயக்கும் நிலாவினிலே....

ஆண் : எது உண்மை இங்கே

எது கனவு இங்கே

அரேபிய இரவினிலே

ஆண் : அரேபிய யாமம்

பகல் போலத் தோன்றும்

ஓ எப்போதுமே

ஓ சூடாகவே

ஓர் வாழ்க்கை இங்கே

ஆண் : அரேபிய யாமம்

கனவைப் போல தோன்றும்

விண்ணில் மண்ணிலே

உன்னில் என்னிலே

மாயம் கண்ணிலே.....

ஆண் : இந்தப் பாதை இங்கே

நன்மை பேராசை என்று

ரெண்டாகி போகும் போதிலே...

ஆண் : இருள் யாவும் நீக்க

முடிவென்ன பார்க்க

உந்தன் வாழ்க்கை உந்தன் கையிலே

Song information

Singer: Sunandhan

Music by: Alan Menken

Release information: From Aladdin 2019 (2019) · Lyricist: Madhan Karky

Explore this song