Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Anbu nadamaadum kalai koodamae

Aasai mazhai megamae

Kannil vilaiyaadum ezhil vannamae

Kanni thamizh mandramae

Female Part

Anbu nadamaadum kalai koodamae

Aasai mazhai megamae

Kannil vilaiyaadum ezhil vannamae

Kanni thamizh mandramae

Male Part

Maadhavi kodi poovin idhazhoramae

Mayakkum madhu chaaramae… ae…

Maadhavi kodi poovin idhazhoramae

Mayakkum madhu chaaramae

Male Part

Manjal veyil polum

Malar vanna mugamae

Mannar kula thangamae

Pachai malai thottam maniyaaramae

Paadum pudhu raagamae

Male Part

Anbu nadamaadum kalai koodamae

Aasai mazhai megamae

Female : Kannil vilaiyaadum ezhil vannamae

Kanni thamizh mandramae

Female Part

Vellalai kadalaadum ponnodamae

Vilakkin oli vellamae… ae…

Vellalai kadalaadum ponnodamae

Vilakkin oli vellamae

Sellum idam thorum

Pugazh saerkkum thavamae

Thennar kula mannanae

Male Part

Indru kavi paadum en selvamae

Endrum en dheivamae

Male Part

Maanilam ellaamum nam illamae

Makkal nam sondhamae

Female Part

Kaanum nilamengum

Thamizh paadum manamae

Ulagam namadhaagumae

Male Part

Andru kavi vaendhan

Sol vannamae

Yaavum uravaagumae

Male Part

Anbu nadamaadum kalai koodamae

Aasai mazhai megamae

Female : Kannil vilaiyaadum ezhil vannamae

Kanni thamizh mandramae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அன்பு நடமாடும் கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

பெண் : அன்பு நடமாடும் கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

ஆண் : மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே

மயக்கும் மதுச் சாரமே......ஏ...

மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே

மயக்கும் மதுச் சாரமே

ஆண் : மஞ்சள் வெயில் போலும்

மலர் வண்ண முகமே

மன்னர் குலத் தங்கமே

பச்சை மலைத் தோட்டம் மணியாரமே

பாடும் புது ராகமே

ஆண் : அன்பு நடமாடும் கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

பெண் : கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

பெண் : வெள்ளலை கடலாடும் பொன்னோடமே

விளக்கின் ஒளி வெள்ளமே... ஏ...

வெள்ளலை கடலாடும் பொன்னோடமே

விளக்கின் ஒளி வெள்ளமே

செல்லும் இடம் தோறும்

புகழ் சேர்க்கும் தவமே

தென்னர் குல மன்னனே

ஆண் : இன்று கவி பாடும் என் செல்வமே

என்றும் என் தெய்வமே

ஆண் : மாநிலம் எல்லாமும் நம் இல்லமே

மக்கள் நம் சொந்தமே

பெண் : காணும் நிலமெங்கும்

தமிழ் பாடும் மனமே

உலகம் நமதாகுமே

ஆண் : அன்று கவி வேந்தன்

சொல் வண்ணமே

யாவும் உறவாகுமே

ஆண் : அன்பு நடமாடும் கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

பெண் : கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Avandhan Manidhan (1975) · Lyricist: Kannadasan

Explore this song