Roman script
Singer : Sirkazhi Govindarajan Music by : R. Govardhanam Male Part Anaithum aandavan kai raasi Anaithum aandavan kai raasi Ulaganaithum aandavan kai raasi Aakkalum kaathalum arulvadhum aagiya Anaithum aandavan kairaasi Male Part Aariya maanidar Piraviyai adainthathu Ayalaar ezhuthiya kairaasi Adhil anbum aranum Udaiyavar aavadhu Avaravar aatralin kai raasi Male Part Kalagam illaamal Ulagam vaazhvadhu Kalappai pidippavan kairaasi Kalagam illaamal Ulagam vaazhvadhu Kalappai pidippavan kairaasi Palavidha selvamum orungae amaivadhu Paanai pidippaval kairaasi Male Part Maadham mummaariyum Mangala vaazhvum Maadham mummaariyum Mangala vaazhvum Karppudai maadharin kairaasi Manathuyar yaavum panipol maraivathu Mazhalai selvangal mugaraasi Male Part Thottadhellam thangam…aa….aa… Thottadhellam thangam aaki tharuvathu Thozhilaalargalin kai raasi Natta chedigal ellam kanigal tharuvadhu Nallavar thangalin kairaasi Male Part Bharatha naadu Sudhandhiram aanathu Baabujiyin kairaasi Bharatha naadu Sudhandhiram aanathu Baabujiyin kairaasi Paarinil makkal nalla Panbudan vaazhvadhu Vaanpugazh valluvan kural raasi
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : ஆர். கோவர்தனம் ஆண் : அனைத்தும் ஆண்டவன் கைராசி அனைத்தும் ஆண்டவன் கைராசி உலகனைத்தும் ஆண்டவன் கைராசி ஆக்கலும் காத்தலும் அருள்வதும் ஆகிய அனைத்தும் ஆண்டவன் கைராசி ஆண் : ஆரிய மானிடர் பிறவி அடைந்தது அயலார் எழுதிய கைராசி அதில் அன்பும் அறனும் உடையவர் ஆவது அவரவர் ஆற்றலின் கைராசி ஆண் : கலகம் இல்லாமல் உலகம் வாழ்வது கலப்பை பிடிப்பவன் கைராசி கலகம் இல்லாமல் உலகம் வாழ்வது கலப்பை பிடிப்பவன் கைராசி பலவித செல்வமும் ஒருங்கே அமைவது பானைப் பிடிப்பவள் கைராசி ஆண் : மாதம் மும்மாரியும் மங்கல வாழ்வும் மாதம் மும்மாரியும் மங்கல வாழ்வும் கற்புடை மாதரின் கைராசி மனத்துயர் யாவும் பனிப்போல் மறைவது மழலை செல்வத்தின் முகராசி ஆண் : தொட்டதெல்லாம் தங்கம்.....ஆ.....ஆ..... தொட்டதெல்லாம் தங்கம் ஆக்கி தருவது தொழிலாளர்களின் கைராசி நட்ட செடிகள் எல்லாம் கனிகள் தருவது நல்லவர் தங்களின் கைராசி ஆண் : பாரதநாடு சுதந்திரம் ஆனது பாபூஜியின் கைராசி பாரதநாடு சுதந்திரம் ஆனது பாபூஜியின் கைராசி பாரினில் மக்கள் நல்ல பண்புடன் வாழ்வது வான்புகழ் வள்ளுவன் குறள் ராசி
Song information
Singer: Sirkazhi Govindarajan
Music by: R. Govardhanam
Release information: From Kairasi (1960) · Lyricist: Kothamangalam Subbu
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan
- Film / album: Kairasi
- Composer: R. Govardhanam