Roman script

Singer : P. Leela

Music by : S. V. Venkataraman

Female Part

Ammaa vendrae

Nee azhaikkum kuralilae

Petra annaiyilum sirandha

Anbae pongudhae

Female Part

Maanilammael undhan

Paal magizhvaai endrum

Vaanjai kolvaarae

Vaazhndhidu vaarae

Maanilammael undhan

Paal magizhvaai endrum

Vaanjai kolvaarae

Vaazhndhidu vaarae

Female Part

Thaenadhu pol

Dhinam nee tharum paaladhanaalae

Thaenadhu pol

Dhinam nee tharum paaladhanaalae

Seeva amudha gnjaanam

Peruga seivadhanaalae

Seeva amudha gnjaanam

Peruga seivadhanaalae

Nalamaevum selvam yaavum

Kulavummigamenmaelae…ae….

Female Part

Maanilammael undhan

Paal magizhvaai endrum

Vaanjai kolvaarae

Vaazhndhidu vaarae

Female Part

Azhaghaana maadappuraavae

Anbae neeyae

Aanandha maai vaanil

Parandhu selvaayae

Adhai thodarndhae

Nalvanna puraavae

Nee sella

Adhai thodarndhae

Nalvanna puraavae

Nee sella aasai kondaayo

Paasathinaalae

Aasai kondaayo paasathinaalae

Aasai kondaayo paasathinaalae

Andhi pozhudhaagum munnae

Adhu vandhu saerum unnodae

Udan aadippaadi sodiyaaga

Magizhndhidalaam pin adhanodae

Female Part

Maanilammael undhan

Paal magizhvaai endrum

Vaanjai kolvaarae

Vaazhndhidu vaarae

தமிழ்

பாடகி : பி.சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : அம்மா வென்றே

நீ அழைத்திடும் குரலிலே

பெற்ற அன்னையிலும்

அன்பே பொங்குதே

பெண் : மானிலம்மேல் உந்தன்

பால் மகிழ்வாய் என்றும்

வாஞ்சை கொள்வாரே

வாழ்ந்திடு வாரே

மானிலம்மேல் உந்தன்

பால் மகிழ்வாய் என்றும்

வாஞ்சை கொள்வாரே

வாழ்ந்திடு வாரே

பெண் : தேனதுபோல்

தினம் நீ தரும் பாலதனாலே

தேனதுபோல்

தினம் நீ தரும் பாலதனாலே

சீவ அமுத ஞானம்

பெருக செய்வதனாலே

சீவ அமுத ஞானம்

பெருக செய்வதனாலே

நலமேவும் செல்வம் யாவும்

குலவும்மிகமென்மேலே.....ஏ.....

பெண் : மானிலம்மேல் உந்தன்

பால் மகிழ்வாய் என்றும்

வாஞ்சை கொள்வாரே

வாழ்ந்திடு வாரே

பெண் : அழகானமாடப்புறாவே

அன்பே நீயே

ஆனந்த மாய் வானில்

பறந்து செல்வாயே

அதைத் தொடர்ந்தே

நல்வண்ணப் புறாவே

நீ செல்ல

அதைத் தொடர்ந்தே

நல்வண்ணப் புறாவே

நீ செல்ல

ஆசை கொண்டாயோ

பாசத்தினாலே

ஆசை கொண்டாயோ பாசத்தினாலே

ஆசை கொண்டாயோ பாசத்தினாலே

அந்திப் பொழுதாகும் முன்னே

அதுவந்து சேரும் உன்னோடே

உடன் ஆடிப்பாடி சோடியாக

மகிழ்ந்திடலாம் பின் அதனோடே

பெண் : மானிலம்மேல் உந்தன்

பால் மகிழ்வாய் என்றும்

வாஞ்சை கொள்வாரே

வாழ்ந்திடு வாரே

Song information

Singer: P. Leela

Music by: S. V. Venkataraman

Release information: From Panakkaari (1953) · Lyricist: Papanasam Sivan

Explore this song