Roman script
Singers : T. M. Soundararajan and P. Leela Music by : S. Vedhachalam Female Part Amirthayogam vellikizhamai kannaalaa Adhukkuththaaae kaaththirunthaen innaalaa Male : Azhagu silaiyae amutha kalaiyae unnaalae Mezhugu polae urugi nindraen thannaalae Female Part Ulaginilae oru pudhumai idhu Unakkena piranthitta padhumai Pazhagivittaal idhan magimai Vayiru pasiyum edukkaatha ilamai Ini pazhagivittaal idhan magimai Vayiru pasiyum edukkaatha ilamai Ini pazhagivittaal idhan magimai Inbam tharum kannaalaa Adhukkuththaanae kaaththirunthaen innaalaa Male Part Azhagu silaiyae amutha kalaiyae unnaalae Mezhugu polae urugi nindraen thannaalae Male Part Nee kanintha kadhalin virunthu Adhu kavalai theerththidum marunthu Ondru kalanthu konja kaalam irunthu Mei kadhal vaazhvilae inainthu Ondru kalanthu konja kaalam irunthu Mei kadhal vaazhvilae inainthu Inbam tharum unnalae Mezhugu polae urugi nindraen thannaalae Female Part Amirthayogam vellikizhamai kannaalaa Adhukkuththaaae kaaththirunthaen innaalaa Female Part Nigarilaa paruva thaagam thaniyaa Neendhuvom inba logam Male : Ini inaiyillaatha suga yogam Idhuthaanae vaazhvin anuraagam Ini inaiyillaatha suga yogam Idhuthaanae vaazhvin anuraagam Inbam tharum unnalae Mezhugu polae urugi nindraen thannaalae Female Part Amirthayogam vellikizhamai kannaalaa Adhukkuththaaae kaaththirunthaen innaalaa….
தமிழ்
பாடகர்கள் : டி. எம் சௌந்தரராஜன் மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா ஆண் : அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே பெண் : உலகினிலே ஒரு புதுமை இது உனக்கென பிறந்திட்ட பதுமை பழகிவிட்டால் இதன் மகிமை வயிறு பசியும் எடுக்காத இளமை இனி பழகிவிட்டால் இதன் மகிமை வயிறு பசியும் எடுக்காத இளமை இன்பம் தரும் கண்ணாளா அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா...... ஆண் : அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே ஆண் : நீ கனிந்த காதலின் விருந்து அது கவலை தீர்த்திடும் மருந்து ஒன்று கலந்து கொஞ்ச காலம் இருந்து மெய்க் காதல் வாழ்விலே இணைந்து ஒன்று கலந்து கொஞ்ச காலம் இருந்து மெய்க் காதல் வாழ்விலே இணைந்து இன்பம் தரும் உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே பெண் : அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா பெண் : நிகரிலா பருவ தாகம் தணிய நீந்துவோம் இன்ப லோகம் ஆண் : இனி இணையில்லாத சுக யோகம் இதுதானே வாழ்வின் அனுராகம் இனி இணையில்லாத சுக யோகம் இதுதானே வாழ்வின் அனுராகம் இன்பம் தரும் உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே பெண் : அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா
Song information
Singers: T. M. Soundararajan and P. Leela
Music by: S. Vedhachalam
Release information: From Anbu Engey (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Leela
- Film / album: Anbu Engey
- Composer: S. Vedhachalam