Roman script

Singer : K. J. Jesudass

Music by : S. A. Rajkumar

Male Part

Thanthana nana thana thanthananaa

Thana thnthana thanthaana nana thana thanthananaa

Male Part

Ada nichchayatharththam maelae nadakkuthu saami

Adhu nadakkum munnaalae yaarukku yaaru kaami

Ada nichchayatharththam maelae nadakkuthu saami

Adhu nadakkum munnaalae yaarukku yaaru kaami

Male Part

Ponnu kazhuththula thaali

Vizhukira varaikkum nichchayamaagaathu

Thalai ezhuththula saami ezhuthiyatha

Ingu azhichchcavan kedaiyaathu

Male Part

Ada nichchayatharththam maelae nadakkuthu saami

Male Part

Thagappan kizhiththaan oru kodu

Thaai padumpaadu perumpaadu

Magalae unakkor maru veedu

Vaguppaan iraivaan edhir paaru

Vidinthidum iravu veluththidum kizhakku

Poruththiru magalae pulambuthal edharkku

Male Part

Naadaga medai vaazhkkaiyilae

Naalaiya kaatchiyai yaar arivaar

Edhuvum nadakkalaam thadaiyai kadakkalam

Vidhaigal mulaiththu varalaam

Male Part

Ada nichchayatharththam maelae nadakkuthu saami

Male Part

Siraiyil irukkum kilikooda

Siragai virikkum paranthoda

Iraivan ninaiththaal naddakkaatho

Thiravaa kadhavaa thirakkaatho

Velaigal varalaam viduthalai kidaikka

Naayagan theerppai evan vanthu thadukka

Male Part

Aandavan kaattum vedikkaithaan

Avanukku adhuve vaadikkaithaan

Ilaigal udhiralaam kilaigal varunthaalaam

Vasantham thirumba varalaam

Male Part

Ada nichchayatharththam maelae nadakkuthu saami….

தமிழ்

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : தந்தன நன தன தந்தனனா

தன தந்தன தந்தான நன தன தந்தனனா

ஆண் : அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி

அது நடக்கும் முன்னாலே யாருக்கு யாரு காமி

அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி

அது நடக்கும் முன்னாலே யாருக்கு யாரு காமி

ஆண் : பொண்ணு கழுத்துல தாலி

விழுகிற வரைக்கும் நிச்சயமாகாது

தலை எழுத்துல சாமி எழுதியத

இங்கு அழிச்சவன் கெடையாது

ஆண் : அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி....

ஆண் : தகப்பன் கிழித்தான் ஒரு கோடு

தாய் படும்பாடு பெரும்பாடு

மகளே உனக்கோர் மறு வீடு

வகுப்பான் இறைவன் எதிர் பாரு

விடிந்திடும் இரவு வெளுத்திடும் கிழக்கு

பொறுத்திரு மகளே புலம்புதல் எதற்கு

ஆண் : நாடக மேடை வாழ்க்கையிலே

நாளைய காட்சியை யார் அறிவார்

எதுவும் நடக்கலாம் தடையை கடக்கலாம்

விதைகள் முளைத்து வரலாம்

ஆண் : அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி....

ஆண் : சிறையில் இருக்கும் கிளி கூட

சிறகை விரிக்கும் பறந்தோட

இறைவன் நினைத்தால் நடக்காதோ

திறவா கதவும் திறக்காதோ

வேளைகள் வரலாம் விடுதலை கிடைக்க

நாயகன் தீர்ப்பை எவன் வந்து தடுக்க

ஆண் : ஆண்டவன் காட்டும் வேடிக்கைதான்

அவனுக்கு அதுவே வாடிக்கைத்தான்

இலைகள் உதிரலாம் கிளைகள் வருந்தலாம்

வசந்தம் திரும்ப வரலாம்

ஆண் : அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி

அது நடக்கும் முன்னாலே யாருக்கு யாரு காமி...

ஆண் : பொண்ணு கழுத்துல தாலி

விழுகிற வரைக்கும் நிச்சயமாகாது

தலை எழுத்துல சாமி எழுதியத

இங்கு அழிச்சவன் கெடையாது

ஆண் : அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி.....

Song information

Singer: K. J. Jesudass

Music by: S. A. Rajkumar

Release information: From Thaali Kattiya Raasa (1992) · Lyricist: Vaali

Explore this song