Roman script
Singers : Dheepan Chakravarthi and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Abirami Patter Female Part Pooththavalae puvanam pathinaangaiyum Pooththa vannam kaaththavalae pin karanthavalae Karaikandanukku mooththavalae Endrum moovaa muguntharkku ilaiyavalae Male Part Maaththavalae unnaiyindri Mattror dheivam vanthippathae…aa…aa…aa… Female Part Abhiramavalliyin thiruvarulae Nammai anuthinam kaaththidum ponmalare Puviyorin kuraitheerkka vanthavalae indru Poovaagai kaayaagi kaninthavalae Chorus Abhiramavalliyin thiruvarulae Nammai anuthinam kaaththidum ponmalare Female Part Dhanam tharum kalvi tharum oru naalum Thalarvariyaa manam tharum Male : Dheiva vadivum tharum nenjil Vanjamillaa inam tharum Nallana ellaam tharum anbar enbavarkke Ganam tharum poonguzhaal abhirami kadaikangalae Male Part Sannathi thedi vanthavarkku Sagala nalanum thanthaalae Annaiyin kangal kanivudanae
Abayam tharum innaalae Santhanaththil nindraalae saambalilum pooththaalae Female : Kungumaththil siriththaalae Kuzhanthai ennai anaiththaalae Chorus Abhiramavalliyin thiruvarulae Nammai anuthinam kaaththidum ponmalare Male Part Aaththaalai engal abhiramavalliyai Andam ellaam pooththaalai Maadhulam poo niraththaalai Puviyadanga kaaththaalai Ainganai paasaangusamum karumbuvillum Angai saerththaalai mukkanniyai Thozhuvaarrkku oru theengum illaiyae Chorus Samayapuraththil koyil konda sangari Sooli neeli pathrakaali saampavi Samayapuraththil koyil konda sangari Sooli neeli pathrakaali saampavi Periya paalaiyam jothi thavazhum aalayam Periya paalaiyam jothi thavazhum aalayam Arulvadivaai maangaattil amarnthiruppaalae Analaai nirainthiruppaalae Chorus Abhiramavalliyin thiruvarulae Nammai anuthinam kaaththidum ponmalare Abhiramavalliyin thiruvarulae Nammai anuthinam kaaththidum ponmalare
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : அபிராமி பட்டர் பெண் : பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்க்கு இளையவளே ஆண் : மாத்தவளே உன்னையின்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.....ஆ...ஆ....ஆ.... பெண் : அபிராமவல்லியின் திருவருளே நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே புவியோரின் குறைத்தீர்க்க வந்தவளே இன்று பூவாகி காயாகி கனிந்தவளே... குழு : அபிராமவல்லியின் திருவருளே நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே பெண் : தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் ஆண் : தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே... ஆண் : சன்னதி தேடி வந்தவர்க்கு சகல நலனும் தந்தாளே அன்னையின் கண்கள் கனிவுடனே அபயம் தரும் இந்நாளே சந்தனத்தில் நின்றாளே சாம்பலிலும் பூத்தாளே பெண் : குங்குமத்தில் சிரித்தாளே குழந்தை என்னை அணைத்தாளே..... குழு : அபிராமவல்லியின் திருவருளே நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே ஆண் : ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவியடங்கக் காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே குழு : சமயபுரத்தில் கோயில் கொண்ட சங்கரி சூலி நீலி பத்ரகாளி சாம்பவி சமயபுரத்தில் கோயில் கொண்ட சங்கரி சூலி நீலி பத்ரகாளி சாம்பவி பெரியபாளையம் ஜோதி தவழும் ஆலயம் பெரியபாளையம் ஜோதி தவழும் ஆலயம் அருள்வடிவாய் மாங்காட்டில் அமர்ந்திருப்பாளே அனலாய் நிறைந்திருப்பாளே...... குழு : அபிராமவல்லியின் திருவருளே நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே அபிராமவல்லியின் திருவருளே நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே
Song information
Singers: Dheepan Chakravarthi and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Abirami Patter
Release information: From Om Sakthi (1982) · Singer: Dheepan Chakravarthi and Vani Jairam · Lyricist: Abirami Patter · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Dheepan Chakravarthi and Vani Jairam
- Film / album: Om Sakthi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Abirami Patter