Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male Part Haaa…aaa…aaa…aa..hoo oo oo Aathilae thanni vara Adhiloruvan meen pidikka Kaathirundha kokku adhai Kavvikondu povadhum yen Aathilae thanni vara Adhiloruvan meen pidikka Kaathirundha kokku adhai Kavvikondu povadhum yen Kannamma… Kannamma adhai paathu Avan yenguvadhaen sollammaa Male Part Paathi katti naathu nattu Palanedukkum naaliyilae Poothathellaam ver oruvan Paathiyama povadhum yen Paathi katti naathu nattu Palanedukkum naaliyilae Poothathellaam ver oruvan Paathiyama povadhum yen Kannamma… Kannamma kalappai pudichavanum Thavipadhum yen sollamma Kalappai pudichavanum Thavipadhum yen sollamma Chorus …………………. Male Part Panjeduthu padhapaduthi Pakkuvama nool noottru Nenjodiya aadai neidhom kannamma Ingu kandhal udai kattuvadhen sollamma Panjeduthu padhapaduthi Pakkuvama nool noottru
Nenjodiya aadai neidhom kannamma Ingu kandhal udai kattuvadhen sollamma..haaaa Kaathirukkum athai mavan Kann kalangi nirkkaiyilae Naethu vandha oruvanukku Maathu maalai poduvadhaen Male Part Kaathirukkum athai mavan Kann kalangi nirkkaiyilae Naethu vandha oruvanukku Maathu maalai poduvadhaen Kannamma kannamma aval Nethirathai paripadhum yen sollamma Chorus ……………………. Male Part Yettra thazhvum yemaattrum Ivvulagil iruppadhu thaan Ithanaikkum karanamaam kannamma Yettra thazhvum yemaattrum Ivvulagil iruppadhu thaan Ithanaikkum karanamaam kannamma Idhai ellorkkum nee eduthu sollamma Kannamma… Ellorkkum nee eduthu sollamma Male Part Aathilae thanni vara Adhiloruvan meen pidikka Kaathirundha kokku adhai Kavvikondu povadhum yen Kannamma… Kannamma adhai paathu Avan yenguvadhaen sollammaa Chorus ………………….. Male Part Kannamma…sollammaa Kannamma…sollammaa
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஹா..ஆ..ஆ..ஆ..ஹோ ..ஓ ஓ ..ஹோ.. ஆண் : ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்? ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா கண்ணம்மா அதைப் பாத்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா ஆண் : பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன் பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன் கண்ணம்மா கண்ணம்மா கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா குழு : ....................... ஆண் : பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல் நூற்று நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல் நூற்று நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆ.. காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன் ஆண் : காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன் கண்ணம்மா கண்ணம்மா அவள் நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா குழு : ....................... ஆண் : ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா இதை எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா ஆண் : ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா கண்ணம்மா அதைப் பாத்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா ஆண் : கண்ணம்மா ..சொல்லம்மா கண்ணம்மா ..சொல்லம்மா
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Vannakili (1959) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Vannakili
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi