Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Aandavanae nee irunthaa sollu

Silar arivaiyellaam kedukuthadaa kallu

Maandavanum kudithavanum ondru

Silar mandaiyilae yaeralaiyae indru

Male Part

Thaali kodiyai viththu

Thanni podum manithanukku

Santhosam ethanai naal solladaa

Un thalaiyezhuththu istam pola seiyada

Male Part

Kallai kudithavargal

Nanjai undorendru

Valluvanaar solli

Vaiththaar kuralilae

Male Part

Sonnaalum purivathillai

Sontha puthi yaedhumillai

Pattaalthaan thelivu

Varum arivilae

Male Part

Aandavanae nee irunthaa sollu

Silar arivaiyellaam kedukuthadaa kallu

Maandavanum kudithavanum ondru

Silar mandaiyilae yaeralaiyae indru

Male Part

Naanum kudithirukkaen

Kudipporai paarththirukkaen

Nalla puthi varuvathillai kudiyilae

Oru naai kooda mathippathillai theruvilae

Male Part

Ooril nallavanaai pereduthu paaru

Ulloora bodhai varum pugazhilae

Paaraattu ketkaiyilae thalai varaikkum yaerum

Panpaana bodhaiyillai kudiyillae

Male Part

Aandavanae nee irunthaa sollu

Silar arivaiyellaam kedukuthadaa kallu

Maandavanum kudithavanum ondru

Silar mandaiyilae yaeralaiyae indru

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆண்டவனே நீ இருந்தா சொல்லு

சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு

மாண்டவனும் குடித்தவனும் ஒன்று

சிலர் மண்டையிலே ஏறலையே இன்று

ஆண் : தாலிக் கொடியை வித்து

தண்ணி போடும் மனிதனுக்கு

சந்தோசம் எத்தனை நாள் சொல்லடா

உன் தலையெழுத்து இஷ்டம் போல செய்யடா

ஆண் : கள்ளைக் குடித்தவர்கள்

நஞ்சை உண்டோரென்று

வள்ளுவனார் சொல்லி

வைத்தார் குறளிலே

ஆண் : சொன்னாலும் புரிவதில்லை

சொந்த புத்தி ஏதுமில்லை

பட்டால்தான் தெளிவு

வரும் அறிவிலே........

ஆண் : ஆண்டவனே நீ இருந்தா சொல்லு

சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு

மாண்டவனும் குடித்தவனும் ஒன்று

சிலர் மண்டையிலே ஏறலையே இன்று

ஆண் : நானும் குடித்திருக்கேன்

குடிப்போரை பார்த்திருக்கேன்

நல்ல புத்தி வருவதில்லை குடியிலே

ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே

ஆண் : ஊரில் நல்லவனாய் பேரெடுத்து பாரு

உள்ளூர போதை வரும் புகழிலே

பாராட்டு கேட்கையிலே தலை வரைக்கும் ஏறும்

பண்பான போதையில்லை குடியிலே....

ஆண் : ஆண்டவனே நீ இருந்தா சொல்லு

சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு

மாண்டவனும் குடித்தவனும் ஒன்று

சிலர் மண்டையிலே ஏறலையே இன்று

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Paasa Deepam (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song