Roman script

Singers : Jikki and S. C. Krishnan

Music by : Master Venu

Lyrics by : A. Maruthakasi

Male Part

Aanandhu achu ponadhu pochu anjaamal vaa

Ini allal undhan vaazhvilae minjaadhamma

Ini allal undhan vaazhvilae minjaadhamma

Female Part

Aaruthal kaana therudhal sollum anbullamae

Maravaadhu indha nandriiyai en ullamae

Maravaadhu indha nandriiyai en ullamae

Male Part

Vaanam poiyaamalae kodi vaazhumaa

Pennin vaazhvum adhupola thaan nee kelamma

Vaanam poiyaamalae kodi vaazhumaa

Aanin anbenum mazhai illamlae

Pengal yaarum ingu vaazha mudiyaadhamma

Male Part

Aanandhu achu ponadhu pochu anjaamal vaa

Ini allal undhan vaazhvilae minjaadhamma

Ini allal undhan vaazhvilae minjaadhamma

Female Part

Naanum nandraai adhai ariven aiyaa

Ungal nadagamum ennidathil palikaadhaiyaa

Naanum nandraai adhai ariven aiyaa

Maanam nidhanam ulla pen naanaiyaa

Yemaali endru ennai enna vendam aiyaa

Aaruthal kaana therudhal sollum anbullamae

Maravaadhu indha nandriiyai en ullamae

Maravaadhu indha nandriiyai en ullamae

Male Part

Paaraai nee andha poonjolaiyai

Adhai padhukkakka pottirukum pudhu veliyai

Paaraai nee andha poonjolaiyai

Seeraai ennaalum adhu pola vazhavae

Ingu thevaiyamma pennukku pon thaaliyae

Male Part

Aanandhu achu ponadhu pochu anjaamal vaa

Ini allal undhan vaazhvilae minjaadhamma

Ini allal undhan vaazhvilae minjaadhamma

Female Part

Paadhai maaramalae nee sellaiyaa

Ora paarvai paarkka neramidha nee sollaiyaa

Paadhai maaramalae nee sellaiyaa

Paasam undavadhu thannaal aiyaa

Adhai paattu paadi kettu vaanga mudiyaadhaiyaa

Aaruthal kaana therudhal sollum anbullamae

Maravaadhu indha nandriiyai en ullamae

Maravaadhu indha nandriiyai en ullamae

தமிழ்

பாடகர்கள்  : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா

இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா

இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா

பெண் : ஆறுதல் காண தேறுதல் சொல்லும் அன்புள்ளமே

மறவாது இந்த நன்றியை என் உள்ளமே....

மறவாது இந்த நன்றியை என் உள்ளமே....

ஆண் : வானம் பெய்யாமலே குடி வாழுமா

பெண்ணின் வாழ்வும் அதுபோலத்தான் நீ கேளம்மா

வானம் பெய்யாமலே குடி வாழுமா

ஆணின் அன்பெனும் மழை இல்லாமலே

பெண்கள் யாரும் இங்கு வாழ முடியாதம்மா

ஆண் : ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா

இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா

இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா

பெண் : நானும் நன்றாய் அதை அறிவேனய்யா

உங்கள் நாடகமும் என்னிடத்தில் பலிக்காதய்யா

நானும் நன்றாய் அதை அறிவேனய்யா

மானம் நிதானம் உள்ள பெண் நானய்யா

ஏமாளி என்று என்னை எண்ண வேண்டாமய்யா

பெண் : ஆறுதல் காண தேறுதல் சொல்லும் அன்புள்ளமே

மறவாது இந்த நன்றியை என் உள்ளமே....

மறவாது இந்த நன்றியை என் உள்ளமே....

ஆண் : பாராய் நீ அந்த பூஞ்சோலையை

அதை பாதுகாக்க போட்டிருக்கும் புது வேலியை

பாராய் நீ அந்த பூஞ்சோலையை

சீராய் எந்நாளும் அது போல் வாழவே இங்கு

தேவையம்மா பெண்ணுக்கு பொன் தாலியே

ஆண் : ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா

இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா

இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா

பெண் : பாதை மாறாமலே நீ செல்லய்யா

ஓரப் பார்வை பார்க்க நேரமிதா நீ சொல்லய்யா

பாதை மாறாமலே நீ செல்லய்யா

பாசம் உண்டாவது தன்னாலய்யா அதை

பாட்டு பாடி கேட்டு வாங்க முடியாதய்யா

பெண் : ஆறுதல் காண தேறுதல் சொல்லும் அன்புள்ளமே

மறவாது இந்த நன்றியை என் உள்ளமே....

மறவாது இந்த நன்றியை என் உள்ளமே....

Song information

Singers: Jikki and S. C. Krishnan

Music by: Master Venu

Lyrics by: A. Maruthakasi

Release information: From Manjal Mahimai (1959) · Singer: Jikki and S. C. Krishnan · Lyricist: A. Maruthakasi · Music: Master Venu

Explore this song