தமிழ்

ஆண் : வாராய் நீ வாராய்

வாராய் நீ வாராய்

போகுமிடம் வெகு தூரமில்லை

நீ வாராய்

போகுமிடம் வெகு தூரமில்லை

நீ வாராய்

பெண் : ஆஹா மாருதம் வீசுவதாலே

ஆனந்தம் பொங்குதே மனதிலே... ஏஏஏ

ஆஹா மாருதம் வீசுவதாலே

ஆனந்தம் பொங்குதே மனதிலே... ஏஏஏ

ஆண் : இதனிலும் ஆனந்தம்

அடைந்தே இயற்கையில்

கலந்துயர் விண்ணினைக் காண்பாய்

இதனிலும் ஆனந்தம்

அடைந்தே இயற்கையில்

கலந்துயர் விண்ணினைக் காண்பாய்

அங்கே வாராய்...

பெண் : அமைதி நிலவுதே

சாந்தம் தவழுதே.‌.. ஓஓஓ

அமைதி நிலவுதே

சாந்தம் தவழுதே

அழிவிலா மோன நிலையைத்

தூவுதே... ஏஏஏ

ஆண் : முடிவிலா மோன நிலையை நீ

முடிவிலா மோன நிலையை நீ

மலை முடியில் காணுவாய்

வாராய் வாராய்...

பெண் : ஈடில்லா அழகை

சிகரம் மீதிலே

கண்டு இன்பமே கொள்வோம்

ஈடில்லா அழகை சிகரம் மீதிலே

கண்டு இன்பமே கொள்வோம்

ஆண் : இன்பமும் அடைந்தே இகமறந்தே

வேறுலகம் காணுவாய் அங்கே

இன்பமும் அடைந்தே இகமறந்தே

வேறுலகம் காணுவாய் அங்கே

ஆண் : வாராய் நீ வாராய்

புலியெனைத் தொடர்ந்தே

புதுமான் நீயே வாராய்

ஆண் : வாராய்...

Song information

படம்: மந்திரி குமாரி (1950)

பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி

இசை: ஜி. ராமநாதன்

இயற்றியவர்: ஏ. மருதகாசி

Album: மந்திரி குமாரி

Explore this song