தமிழ்

ஆண்: வெண்ணிலவு சாரல் நீ

வீசும் குளிர் காதல் நீ

ஆண்: வெண்ணிலவு சாரல் நீ

வீசும் குளிர் காதல் நீ

ஆசை வந்து ஆசை தீர

ஆடுகின்ற ஊஞ்சல் நீ

பெண்: கொட்டும் பனி மாயம் நீ

கோடை வெயில் சாயம் நீ

துள்ளி விளையாடும் அன்பில்

தோகையாகும் காலம் நீ

ஆண்: மின்னல் மோதும்

வாசல் நீயே

செல்லமான மீறல் நீயே

நெஞ்சமே எங்கும் தேடல் நீ

ஆண்: வெண்ணிலவு சாரல் நீ

வீசும் குளிர் காதல் நீ

ஆசை வந்து ஆசை தீர

ஆடுகின்ற ஊஞ்சல் நீ

வெண்ணிலவு சாரல் நீ

வீசும் குளிர் காதல் நீ

ஆண்: பாதி நீயே

என் பாதி நீயே

நீயில்லாமல்

நான் ஏது கண்ணே

பெண்: ஆதி நீயே

என் ஆயுள் நீயே

ஆணி வேரை

நீங்காது மண்ணே

ஆண்: எங்கே இருள் என்றாலும்

அங்கே ஒளி நீதானே

பெண்: கண்ணாய் எனை நீயே காக்க

கண்ணீரையும் காணேனே

ஆண்: நீண்ட தூரம்

போன போதும்

நீங்குமோ காதலே

ஆண்: வெண்ணிலவு சாரல் நீ

வீசும் குளிர் காதல் நீ

ஆசை வந்து ஆசை தீர

ஆடுகின்ற ஊஞ்சல் நீ

பெண்: கொட்டும் பனி மாயம் நீ

கோடை வெயில் சாயம் நீ

துள்ளி விளையாடும் அன்பில்

தோகையாகும் காலம் நீ

ஆண்: மின்னல் மோதும் வாசல் நீயே

செல்லமான மீறல் நீயே

நெஞ்சமே எங்கும் தேடல் நீ

Song information

படம்: அமரன் (2024)

பாடியவர்கள்: கபில் கபிலன், ரக்‌ஷிதா சுரேஷ்

இசை: ஜி. வி. பிரகாஷ்குமார்

பாடலாசிரியர்: யுகபாரதி

Album: அமரன்

Explore this song