தமிழ்
ஆண் : மீனம்மா... அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக் கொண்ட போதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும் ஆண் : இது மாதங்கள் நாட்கள் செல்ல பெண் : ஆ... ஆண் : நிறம் மாறிடும் பூக்கள் அல்ல.. பெண் : ஆ... ஆண் : மீனம்மா... அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே ஆண் : ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா.. பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமங்காரன் தானே மாலை போட்டு தானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா...மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்
ஆண் : துத் துத் துது... துத் துதுது..துத் துத் துது... துது இரு : துத் துத் துது... துத் துதுது..துத் துத் துது... துது ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு ஆண் : துத் துத் துது... துத் துதுது... துத் துத் துது... துது ஆண் : மீனம்மா... உன்னை நேசிக்கவும் அன்பு வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு ஆண் : உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டு என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக பெண் : உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட ஆண் : இன்று மோகனம் பாட்டெடுத்தோம் பெண் : ஆ... ஆ... ஆண் : முழு மூச்சுடன் காதலித்தோம் பெண் : ஆ... ஆ... ஆண் : மீனம்மா... அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
Song information
படம்: ஆசை (1995)
இசை: தேவா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள்: பி. உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
Album: ஆசை
Explore this song
- Singer: பி. உன்னி கிருஷ்ணன்
- Singer: அனுராதா ஸ்ரீராம்
- Film / album: ஆசை
- Composer: தேவா
- Lyricist: வாலி
- Actor: அஜித் குமார்
- Actor: சுவலட்சுமி
- Actor: ரோகிணி
- Actor: பிரகாஷ் ராஜ்
- Actor: பூர்ணம் விஸ்வநாதன்
- Actor: வடிவேலு
- Actor: நிழல்கள் ரவி