தமிழ்
ஆண்: பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பெண்: ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத உலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா ஆண்: என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல பெண்: இந்த வேதன யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல ஆண்: ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி பெண்: சுக ராகம் சோகந்தானே சுக ராகம் சோகந்தானே ஆண்: யாரது போறது பெண்: குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா ஆண்: பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா ஆண்: உள்ளம் அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் பெண்: உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் ஆண்: மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே பெண்: எசப் பாட்டு படிச்சேன் நானே எசப் பாட்டு படிச்சேன் நானே ஆண்: பூங்குயில் யாரது பெண்: கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க ஆண்: அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே உலகமே மறந்ததே பெண்: நான்தானே அந்தக் குயில் தானாக வந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா உலகந்தான் மறந்ததா
Song information
படம்: முதல் மரியாதை (1985)
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ் ஜானகி
இசை: இளையராஜா
இயற்றியவர்: வைரமுத்து
Album: முதல் மரியாதை
Explore this song
- Singer: மலேசியா வாசுதேவன்
- Singer: எஸ் ஜானகி
- Film / album: முதல் மரியாதை
- Composer: இளையராஜா
- Actor: சிவாஜி கணேசன்
- Actor: ராதா
- Actor: சத்யராஜ்
- Actor: வடிவுக்கரசி
- Actor: தீபன்
- Actor: ரஞ்சனி
- Actor: ஜனகராஜ்
- Actor: ஏ.கே. வீராச்சாமி