Roman script
Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Yaarukkum vaazhkkai undu Adharkkoru neram undu Yaarukkum vaazhkkai undu Adharkkoru neram undu Male Part Thaazhnthorum oru naalil Vaazhvathundu magalae Thaai veettu seedhanamaai varuvathundu Magalae thaai veettu seedhanamaai varuvathundu Male Part Eththanai penn piranthaar Eththanai per vaazhvizhanthaar Eththanai penn piranthaar Eththanai per vaazhvizhanthaar Aththanaikkum kaaranangal yaedhadi magalae Aathmaavin thairiyamthaan keladi Aathmaavin thairiyamthaan keladi Male Part Yaarukkum vaazhkkai undu Adharkkoru neram undu Male Part Vaazhnthae theervathendru Vairaakkiyam kondu vidu Vaazhnthae theervathendru Vairaakkiyam kondu vidu Saavaiyum vendridalaam vazhiyilae magalae Sanjalamae illai unthan vidhiyilae Male Part Thuninthaal thuyaramillai Thukkamillai vetkkamillai Paninthaalthaan adakki Vaippaar ulagilae magalae Paainthaalae paninthiduvaar kaalilae Male Part Yaarukkum vaazhkkai undu Adharkkoru neram undu Male Part Seedhaiyin kadhaiyinilae Sriraman thunaikku vanthaan Seedhaiyin kadhaiyinilae Sriraman thunaikku vanthaan Sriraman perumaiyillai adhanilae Adhu seedhaiyin perumaiyadi kadhaiyilae Male Part Paanjaali kuzhal mudinthaal Paththiniyaal oor eriththaal Aan jaathi kadhaiyalla avaiyadi unaipol Penn jaathi perumai sollum kadhaiyadi Male Part Yaarukkum vaazhkkai undu Adharkkoru neram undu Male Part Thaazhnthorum oru naalil Vaazhvathundu magalae Thaai veettu seedhanamaai varuvathundu Magalae thaai veettu seedhanamaai varuvathundu
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு ஆண் : தாழ்ந்தோறும் ஒரு நாளில் வாழ்வதுண்டு மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு.... மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு.... ஆண் : எத்தனை பெண் பிறந்தார் எத்தனை பேர் வாழ்விழந்தார் எத்தனை பெண் பிறந்தார் எத்தனை பேர் வாழ்விழந்தார் அத்தனைக்கும் காரணங்கள் ஏதடி மகளே ஆத்மாவின் தைரியம்தான் கேளடி ஆத்மாவின் தைரியம்தான் கேளடி ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு ஆண் : வாழ்ந்தே தீர்வதென்று வைராக்கியம் கொண்டு விடு வாழ்ந்தே தீர்வதென்று வைராக்கியம் கொண்டு விடு சாவையும் வென்றிடலாம் வழியிலே மகளே சஞ்சலமே இல்லை உந்தன் விதியிலே ஆண் : துணிந்தால் துயரமில்லை துக்கமில்லை வெட்கமில்லை பணிந்தால்தான் அடக்கி வைப்பார் உலகிலே மகளே பாய்ந்தாலே பணிந்திடுவார் காலிலே ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு ஆண் : சீதையின் கதையினிலே ஸ்ரீராமன் துணைக்கு வந்தான் சீதையின் கதையினிலே ஸ்ரீராமன் துணைக்கு வந்தான் ஸ்ரீராமன் பெருமையில்லை அதனிலே அது சீதையின் பெருமையடி கதையிலே ஆண் : பாஞ்சாலி குழல் முடிந்தாள் பத்தினியாள் ஊர் எரித்தாள் ஆண் ஜாதி கதையல்ல அவையடி உனைப்போல் பெண் ஜாதி பெருமை சொல்லும் கதையடி ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு ஆண் : தாழ்ந்தோறும் ஒரு நாளில் வாழ்வதுண்டு மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு.... மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thaai Veettu Seethanam (1975) · Singer: M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Thaai Veettu Seethanam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan