தமிழ்

பெண்: உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
பெண்: உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
ஆண்: உன்னை விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட
யாருமில்லை யாருமில்லை
பெண்: வாக்கபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
பெண்: சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
பெண்: என்னை விட உன்னை
சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை
எவளுமில்லை
ஆண்: உன்னை விட
பெண்: என்னை விட
பெண்: அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே
அலை பாயுது
ஆண்: நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே
துதி பாடுது சுதி சேருது
பெண்: என்ன புது தாகம்
அனல் ஆகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கானாக் கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா
மோட்சமா மோட்சமா
ஆண்: உன்னை விட
ஆண்: காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கு அது மூடு பனி
பெண்: உன்னை விட
பெண்: உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும்
அத கேட்குறேன் சாமியே
ஆண்: நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம்
அந்த சாமிய அந்த சாமிய
பெண்: காத்தா அலைஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்
ஆண்: ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கனும்
இருக்கனும் கலக்கனும்
பெண்: உன்னை விட இந்த
உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை
ஒன்னும் இல்லை
ஆண்: உன்னை விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட
யாருமில்லை எவளுமில்லை
ஆண்: வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்லசந்திரன் வருவாண்டி
பெண்: சாதி சனம் எல்லாம்அவன் தான்டி
கேட்ட வரம்உடனே தந்தான்டி
ஆண்: உன்னை விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட
யாருமில்லை யாருமில்லை
பெண்: என்னை விட
ஆண்: உன்னை விட

Song details

படம்: விருமாண்டி (2004)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: கமல்ஹாசன்

பாடியவர்கள்: கமல்ஹாசன், ஸ்ரேயா கோஷல்

Album: விருமாண்டி

Song video

Watch on YouTube