Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Velaalae vizhigal Indru aalolam isaikkum Siru noolaalae idaiyil Manmathan senaigal manthiram paadidum Manmathan senaigal manthiram paadidum Female Part Aa….aa…aa….aa…aa…aa…. Neerodu thaanaadum Thaerodum thirunaal engae Neerodu thaanaadum Thaerodum thirunaal engae Female Part Malligai thaamarai thullidum melliya Poopondra mangai ingae…aaaa…… Poopondra mangai ingae… Manmathan saenaigal manthiram paadidum Male : Manmathan saenaigal manthiram paadidum Male Part Velaalae vizhigal Indru aalolam isaikkum Male Part Pattu selaiyil Minnum ponnizhai Paavai maeniyil aadum Thottu thaavida thullum en manam Kattu kaavaalai meerum Female Part Aa….aa….aa…aa…aa…. Kattum kai valai Thottum mellisai Mottum unnudan odum Chittu kangalil vettum minnalum Pattam pol vilaiyaadum Male Part Poovanna koondhal En manjamaanaal Poovanna koondhal En manjamaanaal Naan konjam paada nee konjam paada Male : Manmathan saenaigal manthiram paadidum Female : Manmathan saenaigal manthiram paadidum Male Part Velaalae vizhigal Indru aalolam isaikkum Female Part Thanga sengani angam unnudan Sangamam aavathu endru Thingal mangaiyin sevvaai unnudan Pongum naadagam endru Male Part Aa….aa…aa…aa…aa… Thiththikkum oru muththu poochcharam Thaththaikkae tharavendru Siththam sonnathu vegam vanthathu Niththam aayiram undu Female Part Paadungal innum Thaalangal thullum Paadungal innum Thaalangal thullum Koodungal endro pennullam sollum Female : Manmathan saenaigal manthiram paadidum Male : Manmathan saenaigal manthiram paadidum Both : Velaalae vizhigal Indru aalolam isaikkum Male : Siru noolaalae idaiyil Both : Manmathan saenaigal manthiram paadidum
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் சிறு நூலாலே இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ.....ஆ.... நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே பெண் : மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய பூப்போன்ற மங்கை இங்கே ..ஆஆஆ... பூப்போன்ற மங்கை இங்கே மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் பெண் : வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் ஆண் : பட்டுச் சேலையில் மின்னும் பொன்னிழை பாவை மேனியில் ஆடும் தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம் கட்டுக் காவலை மீறும் பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ.... கட்டும் கை வளை தொட்டும் மெல்லிசை மொட்டும் உன்னுடன் ஓடும் சிட்டுக் கண்களில் வெட்டும் மின்னலும் பட்டம் போல் விளையாடும் ஆண் : பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால் பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால் நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் பெண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் ஆண் : வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் பெண் : தங்கச் செங்கனி அங்கம் உன்னுடன் சங்கமம் ஆவது என்று திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன் பொங்கும் நாடகம் என்று ஆண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ.... தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம் தத்தைக்கே தரவென்று சித்தம் சொன்னது வேகம் வந்தது நித்தம் ஆயிரம் உண்டு பெண் : பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும் பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும் கூடுங்கள் என்றோ பெண்ணுள்ளம் சொல்லும் பெண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் இருவர் : வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் ஆண் : சிறு நூலாலே இடையில் இருவர் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ennaipol Oruvan (1978) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Ennaipol Oruvan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan