தமிழ்

பெண் : ஏனோ... இன்பமே...
புதுமையாய் காண்பதே ஏஏஏ
காதல் என்பது இதுதானோ
இதுதானோ அறியேனே ஏஏஏ
பெண் : கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே
உள்ளம் பந்தாடுதே ஏஏஏ
பெண் : கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே
உள்ளம் பந்தாடுதே
பெண் : கன்னி என்றேனடி
கைகளை பிடித்தார்
காதலி என்றென்னை
கொஞ்சியே அழைத்தார்
பெண் : கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே
உள்ளம் பந்தாடுதே
ஆண் : சபாஷ் சரியான போட்டி
பெண் : ஜில்லு ஜிலு ஜிலு ஜிலு வென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்
பெண் : ஜில்லு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்
பெண் : ஆடுவேன் பாரடி
பாடுவேன் கேளடி
ஆடுவேன் பாரடி
இனி அனைவரும் மயங்கிட
பெண் : ஜில்லு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்
பெண் : ஆறு பெருகி வரின்
அணை கட்டலாகும்
அன்பின் பாதையில்
அணையிடலாமோ
ஆறு பெருகி வரின்
அணை கட்டலாகும்
அன்பின் பாதையில்
அணையிடலாமோ
பேதமையாலே
மாதே இப்போதே
காதலை வென்றிட
கனவு காணாதே
பெண் : சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி
சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி
பெண் : நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி
பெண் : ஆடும் மயில்
எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில்
வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே
பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடாதேடி
நீ படமெடுத்து ஆடாதேடி
பெண் : இன்னொருத்தி நிகராகுமோ
எனக்கின்னொருத்தி நிகராகுமோ
இடி இடித்தால் மழையாகுமோ
பேதை பெண்ணே
இன்னொருத்தி நிகராகுமோ
பெண் : மின்னலுக்கு அஞ்சேனடி
வீண் வாதமென்ன
முன்னே வந்து நீ ஆடடி
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி
வீண் வாதமென்ன
முன்னே வந்து நீ ஆடடி

Song details

படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)

பாடியவர்கள்: பி. லீலா & ஜிக்கி

இசை: ஸி. ராமச்சந்திரா

பாடலாசிரியர்: கொத்தமங்கலம் சுப்பு

Album: வஞ்சிக்கோட்டை வாலிபன்

Song video

Watch on YouTube