Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Vaarththaigal en nenjil nindrathu Paarvaigal en nandri sonnathu Ennam ellaam nee deivam endrathu Female Part Vaarththaigal en nenjil nindrathu Male Part : Nandriyai solla Naan enna seithaen Nandriyai solla Naan enna seithaen Penmaiyai mathiththaen Verenna seithaen Male Part Vaarththaigal ennai solla sonnathu Paarvaigal naan sonnaen endrathu Ennam ellaam un ullam kandathu Male Part Vaarththaigal ennai solla sonnathu Female Part Uravai thuranthu oorai pirinthu Paravai ondru vanthathu Uravai thuranthu oorai pirinthu Paravai ondru vanthathu Adhan udalai thindru pasiyai theerkka Udalai thindru pasiyai theerkka Ulagam suttri nindrathu Male Part Paravaiyin manamum paal manam endru Paarththaen eduththaen kaiyodu Uravenna pesum oorenna sollum Iru manam kalanthaal anbodu Male Part Vaarththaigal ennai solla sonnathu Paarvaigal naan sonnaen endrathu Female Part Kaalam orunaal kaniyum endru Kanavilum naanthaan ninaiththaeno Kaalam orunaal kaniyum endru Kanavilum naanthaan ninaiththaeno Kadavul manithar vadivil vanthu Kadavul manithar vadivil vanthu Karunaiyai en mael pozhinthaanaa Male Part Yaezhaiyin ullam koyilaai enni Deviyai indru yaettrinaen Nenjilae pongum ninaivelaam Vanna maalaiyaai kondu soottinaen Male Part Vaarththaigal ennai solla sonnathu Paarvaigal naan sonnaen endrathu Male : Ennam ellaam un ullam kandathu Male Part : Vaarththaigal ennai solla sonnathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது பார்வைகள் என் நன்றி சொன்னது எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது பெண் : வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது ஆண் : நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன் நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன் பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன் ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது பார்வைகள் நான் சொன்னேன் என்றது எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது பெண் : உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து பறவை ஒன்று வந்தது உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து பறவை ஒன்று வந்தது அதன் உடலைத் தின்று பசியைத் தீர்க்க உடலைத் தின்று பசியைத் தீர்க்க உலகம் சுற்றி நின்றது ஆண் : பறவையின் மனமும் பால் மனம் என்று பார்த்தேன் எடுத்தேன் கையோடு உறவென்ன பேசும் ஊரென்ன சொல்லும் இரு மனம் கலந்தால் அன்போடு ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது பார்வைகள் நான் சொன்னேன் என்றது பெண் : காலம் ஒருநாள் கனியும் என்று கனவிலும் நான்தான் நினைத்தேனா காலம் ஒருநாள் கனியும் என்று கனவிலும் நான்தான் நினைத்தேனா கடவுள் மனிதர் வடிவில் வந்து கடவுள் மனிதர் வடிவில் வந்து கருணையை என் மேல் பொழிந்தானா ஆண் : ஏழையின் உள்ளம் கோயிலாய் எண்ணி தேவியை இன்று ஏற்றினேன் நெஞ்சிலே பொங்கும் நினைவெலாம் வண்ண மாலையாய் கொண்டு சூட்டினேன் பெண் : வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது பார்வைகள் என் நன்றி சொன்னது ஆண் : எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Avalum Penthane (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Avalum Penthane
- Composer: V. Kumar
- Lyricist: Vaali