Roman script
Singer : Vani Jayaram Music by : Shyam Female Part Uyirae.. mappillai thedi… manamaalai soodi Theruvengum oorvalam pogindra yogam Unakkedhu paavam Pogindra yogam unakkedhu paavam Uyire mappillai thedi… manamaalai soodi Theruvengum oorvalam pogindra yogam Unakkedhu paavam unakkedhu paavam..uyirae… Female Part Aasthikku aanum aasaikku pennum Ena sollum dhesam ingu samaneedhi yedhu Aasthikku aanum aasaikku pennum Ena sollum dhesam ingu samaneedhi yedhu Vilakkettra pogindrom irulaaga vaazhgindrom Sugamenna naam kandom oru naalum illai Female Part Poo choodi vandhom sarugaagi povom Naam endru vaazhvom Idhu pennin jenmam Idhu pennin jenmam…. uyirae Female Part Mudhaleedu illaa vyabaaram ondru Kalyanam endru oor sollum indru Mudhaleedu illaa vyabaaram ondru Kalyanam endru oor sollum indru Ponn kettu vandhaargal porul kettu vandhaargal Pen kettu aan pillai evan ingu vandhaan Female Part Penn ennum selvam nadamaadum deivam Podhu medai pechu Kaatrodu pochu… kaatrodu pochu Female Part Uyirae …mappillai thedi …manamaalai soodi Theruvengum oorvalam pogindra yogam Unakkedhu paavam unakkedhu paavam… uyirae
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷியாம் பெண் : உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம் உனக்கேது பாவம் போகின்ற யோகம் உனக்கேது பாவம் உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி..... தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம் உனக்கேது பாவம் ..உனக்கேது பாவம் ..உயிரே பெண் : ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணும் எனச் சொல்லும் தேசம் இங்கு சமநீதி ஏது ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணும் எனச் சொல்லும் தேசம் இங்கு சமநீதி ஏது விளக்கேற்ற போகின்றோம் இருளாக வாழ்கின்றோம் சுகமென்ன நாம் கண்டோம் ஒருநாளுமில்லை பெண் : பூச்சூடி வந்தோம் சருகாகி போவோம் நாம் என்று வாழ்வோம் இது பெண்ணின் ஜென்மம் இது பெண்ணின் ஜென்மம்....உயிரே....... பெண் : முதலீடு இல்லா வியாபாரம் ஒன்று கல்யாணம் என்று ஊர் சொல்லும் இன்று முதலீடு இல்லா வியாபாரம் ஒன்று கல்யாணம் என்று ஊர் சொல்லும் இன்று பொன் கேட்டு வந்தார்கள் பொருள் கேட்டு வந்தார்கள் பெண் கேட்டு ஆண்பிள்ளை எவன் இங்கு வந்தான் பெண் : பெண் என்னும் செல்வம் நடமாடும் தெய்வம் பொது மேடை பேச்சு காற்றோடு போச்சு... காற்றோடு போச்சு பெண் : உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம் உனக்கேது பாவம்... உனக்கேது பாவம்...உயிரே ..
Song information
Singer: Vani Jayaram
Music by: Shyam
Release information: From Santhosa Kanavugal (1985) · Singer: Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: Shyam
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Santhosa Kanavugal
- Composer: Shyam