Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : V. Kumar Male Part Aahaahaa… aahaahaa… Mhumhum… mhumhum… Aa… haa… haa… Female Part Unnai thotta kaatru vandhu Ennai thottadhu Unnai thotta kaatru vandhu Ennai thottadhu Adhuvae podhum endru penmai indru Kettu kondadhu Varalaam thodalaam mana naal varum podhu Tharuven peralaam pakkam nee varum podhu Female Part Unnai thotta kaatru vandhu Ennai thottadhu Female Part Un paadham thotta alaigalae En paadham thottadhu Nam iruvaraiyum ondru saerkka paalam ittadhu Male Part Aahaahaa… aahaahaa… Ohoho haa aa… aa… Female Part Un paadham thotta alaigalae En paadham thottadhu Nam iruvaraiyum ondru saerkka paalam ittadhu Indha naeram paarthu naanam vandhu kolam ittadhu Konja naal varaiyil poruthirukka aanai ittadhu Male Part Ahahaa ohoho mhuhum lalalaa Female Part Unnai thotta kaatru vandhu Ennai thottadhu Adhuvae podhum endru penmai indru Kettu kondadhu Female Part Mazhai thooral pottu saaral vandhu Unnai nanaithadhu Adhu unnai nanaithu theritha podhu Ennai nanaithadhu Male Part Ahahaa ohoho ohoho ahahaa Female Part Mazhai thooral pottu saaral vandhu Unnai nanaithadhu Adhu unnai nanaithu theritha podhu Ennai nanaitthadhu Adhu thuli thuliyaai enadhu tholil Idam pidithadhu Indha iyarkkai ellaam iruvaraiyum Inaithu paarkkudhu Female Part Adhuvae podhum endru penmai indru Kettu kondadhu Varalaam thodalaam mana naal varum podhu Tharuvaen peralaam pakkam nee varum podhu Female Part Unnai thotta kaatru vandhu Ennai thottadhu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : ஆஹாஹா... ஆஹாஹா... ம்ஹும் ஹும்... ம்ஹும் ஹும்... ஆ... ஹா... ஹா... பெண் : உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது பெண் : உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது பெண் : உன் பாதம் தொட்ட அலைகளே என் பாதம் தொட்டது நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலம் இட்டது ஆண் : ஆஹாஹா... ஆஹாஹா... ஓஹோஹோ ஹா ஆ... ஆ... பெண் : உன் பாதம் தொட்ட அலைகளே என் பாதம் தொட்டது நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலம் இட்டது இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலம் இட்டது கொஞ்ச நாள் வரையில் பொறுத்திருக்க ஆணை இட்டது ஆண் : அஹஹா ஒஹொஹோ ம்ஹுஹும் லலலா பெண் : உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது பெண் : மழைத் தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது ஆண் : ஆஹாஹா ஓஹோஹோ ஓஹோஹோ ஆஹாஹா பெண் : மழைத் தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது அது துளித் துளியாய் எனது தோளில் இடம் பிடித்தது இந்த இயற்கை எல்லாம் இருவரையும் இணைத்துப் பார்க்குது பெண் : அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது பெண் : உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: V. Kumar
Release information: From Navagraham (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Navagraham
- Composer: V. Kumar