Roman script
Singer : K. S. Chithra Music by : Deva Female Part Aasai naayaganae Sowkiyama… Unthan nalam naadum Priyamaanavalin kaditham Female Part Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil Female Part Enthan valayal kulungiyathu Kolusum nazhuviyathu Vetkathil kannangal koosiyathu Manam kaaladi oosaiyai Ethirparthu thudikindrathu Anbae Female Part Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Female Part Chinna kuyilgal Unai unai nalam ketkutha Nenjil paravum Alai alai unai eeramaakutha Female Part Mella nagarum Pagal pagal yugam aagutha Moochivitathaal thalaiyanai Athu theeyil vegutha Female Part Nenjam ethilum ottamal Kannil kanavum vatramal Dhinamum dhinamum urugum manathu Yen intha nilamai theriyavillai Intha paravasam unakullum irukirathaa Anbae… Female Part Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil Female Part Kaalai veyil nee Pani thuli ival allava Ennai kudithu Ini ini un thaagam theerkava Female Part Thullum nathi neer Ival athil nurai allava Iruvarukum idai veli Ini illai allava Female Part Nilavil vegam unnalae Varavaai enthan munnalae Azhagum uyirum unakae sontham Eraalam aasai nenjil undu Athai ezhuthida naanangal thadukirathae Anbae Female Part Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil Chorus …………………………………….
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஆசை நாயகனே சௌக்கியமா உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம் பெண் : உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில் உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில் பெண் : எந்தன் வளையல் குலுங்கியது கொலுசும் நழுவியது வெக்கத்தில் கன்னங்கள் கூசியது மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றது ... அன்பே பெண் : உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில் பெண் : சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா பெண் : மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா மூச்சு விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா பெண் : நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல் தினமும் தினமும் உருகும் மனது ஏன் இந்த நிலைமை தெரியவில்லை இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே..... பெண் : உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில் உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில் பெண் : காலை வெயில் நீ பனித்துளி இவள் அல்லவா என்னைக் குடித்து இனி இனி உன் தாகம் தீர்க்கவா பெண் : துள்ளும் நதி நீ இவள் அதில் நுரை அல்லவா இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா பெண் : நிலவில் வேகம் உன்னாலே வருவாய் எந்தன் முன்னாலே அழகும் உயிரும் உனக்கே சொந்தம் ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே பெண் : உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில் உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில் குழு : ....................................................................
Song information
Singer: K. S. Chithra
Music by: Deva
Release information: From Ninaithen Vandhai (1998) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Ninaithen Vandhai
- Composer: Deva