Roman script

Singers : Karthik and K. S. Chithra

Music by : Mani Sharma

Male Part

Theepori pondradhu

Oru kaadhal enbadhu

Adhai vaazhkai ennum

Thiraiyil yettruvom

Female Part

Ullam enbadhu

Peru vellam pondradhu

Iru karaigal seidhu

Nadhiyaai maatruvom

Male Part

Oru uravil valarum kaadhal

Adhu mazhaiyin thuliyaai thaengum

Female : Siru pirivil valarum kaadhal

Adhu eriyum theeyaai oongum

Male Part

Namm kaadhal pudhu sakthi

Pudhu ulagam seivom

Male Part

Kan thoonga maattom

Cell phone pesa maattom

Kal theindhu pogum

Engal soll theiya maattom

Female Part

Oor kaanum vannam

Ini naer kaana maattom

Poovodu thoongum

Siru thaen pola vaazhvom

Male Part

Poi kaadhal udalodu thullum

Mei kaadhal udal meeri sellum

Eppodum thadai thaandi vellum

Male Part

Mannodu vaazhum

Oru pon pola vaazhvom

Namm kaalam vandhaal

Nagaiyaai maari povom

Female Part

Sila naalil silaiyaavom

Uzhi thaanguvaai malarae

Female Part

Naam konda kaadhal

Sila naal thalli veippom

Naal dhorum vetri

Adhaiyae pulli veippom

Male Part

Por kaalam pola

Oru por kolam kolvom

Boogambam vandhaal

Adhaiyum poraadi velvom

Male Part

Koottukkul vannathu poochi

Adhu thaane porumaikku saatchi

Naalaikku namm kaadhal aatchi

Female Part

Man moodum podhum

Vidhaigal kann mooda villai

Vidhai vettri kollum

Mazhaiyin thuli veezhum vaelai

Male Part

Hoo oo aagaayam namadhaagum

Sila naal poru kiliyae

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கே. எஸ்.சித்ரா

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : தீப்பொறி போன்றது

ஒரு காதல் என்பது

அதை வாழ்க்கை என்னும்

திரியில் ஏற்றுவோம்

பெண் : உள்ளம் என்பது

பெரு வெள்ளம் போன்றது

இரு கரைகள் செய்து

நதியாய் மாற்றுவோம்

ஆண் : ஒரு உறவில் வளரும் காதல்

அது மழையின் துளியாய் தேங்கும்

சிறு பிரிவில் வளரும் காதல்

அது எரியும் தீயாய் ஓங்கும்

ஆண் : நம் காதல் புது சக்தி

புது உலகம் செய்வோம்

ஆண் : கண் தூங்க மாட்டோம்

செல் போன் பேச மாட்டோம்

கல் தேய்ந்து போகும்

எங்கள் சொல் தேய மாட்டோம்

பெண் : ஊர் காணும் வண்ணம்

இனி நேர் காண மாட்டோம்

பூவோடு தூங்கும்

சிறு தேன் போல வாழ்வோம்

ஆண் : பொய் காதல் உடலோடு துள்ளும்

மெய் காதல் உடல் மீறி செல்லும்

எப்போதும் தடை தாண்டி வெல்லும்

ஆண் : மண்ணோடு வாழும்

ஒரு பொன் போல வாழ்வோம்

நம் காலம் வந்தால்

நகையாய் மாறி போவோம்

பெண் : சில நாளில் சிலையாவாய்

உளி தாங்குவாய் மலரே

பெண் : நாம் கொண்ட காதல்

சில நாள் தள்ளி வைப்போம்

நாள்தோறும் வெற்றி

அதையே புள்ளி வைப்போம்

ஆண் : போர் காலம் போல

ஒரு போர் கோலம் கொள்வோம்

பூகம்பம் வந்தால்

அதையும் போராடி வெல்வோம்

ஆண் : கூட்டுக்குள் வண்ணத்து பூச்சி

அதுதானே பொறுமைக்கு சாட்சி

நாளைக்கு நம் காதல் ஆட்சி

பெண் : மண் மூடும் போதும்

விதைகள் கண் மூடவில்லை

விதை வெற்றி கொள்ளும்

மழையின் துளி வீழும் வேளை

ஆண் : ஹோ ஓ ஆகாயம் நமதாகும்

சில நாள் பொறு கிளியே

Song information

Singers: Karthik and K. S. Chithra

Music by: Mani Sharma

Release information: From Aasai Aasaiyai (2003) · Lyricist: Vairamuthu

Explore this song