Roman script

Singer : Vani Jayaram

Music by : Ilayaraja

Female Part

Thaali ondru thaevai enna

Maanaseega vaazhvil

Thaali ondru thaevai enna

Maanaseega vaazhvil

Dharmam ennum sannadhiyil

Kaadhal ondru podhumadi

Female Part

Thaali ondru thaevai enna

Maanaseega vaazhvil

Female Part

{Saevai seiya ninaitha manam

Vaeredhaiyum ninaippadhillai

Dheivam thandha vazhi nandandhaal

Ennaalum thanimai illai} (2)

Paarvathikku gangai vandhaal

Dheviyudan valli vandhaal

Naanum oru gangai alla

Naayaganum sivanum alla

Female Part

Thaali ondru thaevai enna

Maanaseega vaazhvil

Female Part

{Sindhanaiyil vaazhndhirundhaal

Dheiva sugam kodi varum

Saeraadha vaazhvinilum

Kanneeril kavidhai varum} (2)

Ullirukkum kovililae

Or iraivan kudiyirukka

Ooraarkku kaatchi enna

Unmaikku saatchi enna

Female Part

Thaali ondru thaevai enna

Maanaseega vaazhvil

Female Part

{Karparasi nee irukka

Kannagiyai pol irukka

Innum oru kaadhaliyaa

Naan enna maadhaviyaa} (2)

Un nizhalai paarkkaiyilae

Kallellaam urugumadi

En kadhaiyai vittu vidu..

Ennodu mudiyumadi…

Female Part

Thaali ondru thaevai enna

Maanaseega vaazhvil

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தாலி ஒன்று தேவையென்ன

மானசீக வாழ்வில்

தாலி ஒன்று தேவையென்ன

மானசீக வாழ்வில்

தர்மம் என்னும் சன்னதியில்

காதல் ஒன்று போதுமடி

பெண் : தாலி ஒன்று தேவையென்ன

மானசீக வாழ்வில்

பெண் : {சேவை செய்ய நினைத்த மனம்

வேறெதையும் நினைப்பதில்லை

தெய்வம் தந்த வழி நடந்தால்

எந்நாளும் தனிமை இல்லை} (2)

பார்வதிக்கு கங்கை வந்தாள்

தேவியுடன் வள்ளி வந்தாள்

நானும் ஒரு கங்கையல்ல

நாயகனும் சிவனுமல்ல......

பெண் : தாலி ஒன்று தேவையென்ன

மானசீக வாழ்வில்

பெண் : {சிந்தனையில் வாழ்ந்திருந்தால்

தெய்வ சுகம் கோடி வரும்

சேராத வாழ்வினிலும்

கண்ணீரில் கவிதை வரும்} (2)

உள்ளிருக்கும் கோயிலிலே

ஓரிறைவன் குடியிருக்க

ஊரார்க்கும் காட்சியென்ன

உண்மைக்கும் சாட்சியென்ன......

பெண் : தாலி ஒன்று தேவையென்ன

மானசீக வாழ்வில்

பெண் : {கற்பரசி நீயிருக்க

கண்ணகியைப் போலிருக்க

இன்னும் ஒரு காதலியா

நானென்ன மாதவியா} (2)

உன் நிழலை பார்க்கையிலே

கல்லெல்லாம் உருகுமடி

என் கதையை விட்டுவிடு

என்னோடு முடியுமடி

பெண் : தாலி ஒன்று தேவையென்ன

மானசீக வாழ்வில்

Song information

Singer: Vani Jayaram

Music by: Ilayaraja

Release information: From Thirukkalyanam (1978) · Lyricist: Lyricist Not Known

Explore this song