Roman script
Singer : Vani Jairam Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Kanagamani silampanintha kaaliyamma Kaaviri poompattinaththu kannagiyammaa Female Part Thamizhthaayae engum nilaiththaauae Thalai niraiya poo mudiththu kungumamittu Santhanaththil kodizhuththu mangalamittu Kalaiyazhagu kaal parththu mella nadanthu Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa Female Part Thamizhthaayae engum nilaiththaauae Thalai niraiya poo mudiththu kungumamittu Santhanaththil kodizhuththu mangalamittu Kalaiyazhagu kaal parththu mella nadanthu Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa Female Part Than kanvan nizhalandri veru nizhal kaanaatha Thaaimaiyil menmai neeyae Pon magalae poomagalae pugazh padaiththa thirumagalae Nallavarkku ilakkanam neeyae Female Part Thamizhthaayae engum nilaiththaauae Thalai niraiya poo mudiththu kungumamittu Santhanaththil kodizhuththu mangalamittu Kalaiyazhagu kaal parththu mella nadanthu Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa Female Part Poojaikku uriyavalae kanigaiyidam Irunthu meenda kanavarai yaettraai neeyae Kaalangal pesuvathu un dharamam Un menmai un arumai karpe thaayae Female Part Paththinigal anaivarukkum ilakkiyam neeyae Paraththaiyar paal sendravanai meettaval neeyae Aththanai per nenjinilum nindrarulvaayae Arivudanae vaazhumpadi arul purivaayae Female Part Thamizhthaayae engum nilaiththaauae Thalai niraiya poo mudiththu kungumamittu Santhanaththil kodizhuththu mangalamittu Kalaiyazhagu kaal parththu mella nadanthu Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ரம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கனகமணிச் சிலம்பணிந்த காளியம்மா காவிரிப்பூம் பட்டினத்து கண்ணகியம்மா பெண் : தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா பெண் : தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா பெண் : தன் கணவன் நிழலன்றி வேறு நிழல் காணாத தாய்மையில் மேன்மை நீயே பொன் மகளே பூமகளே புகழ் படைத்த திருமகளே நல்லவர்க்கு இலக்கணம் நீயே பெண் : தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா பெண் : பூஜைக்கு உரியவளே கணிகையிடம் இருந்து மீண்ட கணவரை ஏற்றாய் நீயே காலங்கள் பேசுவது உன் தர்மம் உன் மென்மை உன் அருமை கற்பே தாயே பெண் : பத்தினிகள் அனைவருக்கும் இலக்கியம் நீயே பரத்தையர் பால் சென்றவனை மீட்டவள் நீயே அத்தனை பேர் நெஞ்சினிலும் நின்றருள்வாயே அறிவுடனே வாழும்படி அருள் புரிவாயே.... பெண் : தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா
Song information
Singer: Vani Jairam
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Naan Nanethan (1980) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Naan Nanethan
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan