Roman script

Singer : Mahalakshmi Iyer

Music by : S. A. Rajkumar

Female Part

Rojakkalae

Nam nenjil pookkumae

Vaan meghamae

Pani saalvai porthumae

Female Part

Poon thooralae

Saamarangal veesidumae

Nam kannilae..ae..

Kavidhaigalum poothidumae

Rangoli kolam pola

Vaazhkai vannam aagumae

Female Part

Rojakkalae

Nam nenjil pookkumae

Vaan meghamae

Pani saalvai porthumae

Chorus

Oooo..ooo..ooo..oo..

Oooo..ooo..oo..oo..oo……

Female Part

Paravaigalaai paravaigalaai

Parakkum chinna vaydhinilae

Kavalaigalai kavalaigalai

Kaatril parakka viduvomae

Female Part

Pavala malli pavala malli

Pookkum azhagai rasippomae

Mani kanakkil pookkalidam

Arattai adithu sirippomae

Female Part

Manathil… manathil

Isaiyin saaralae

Idhudhaan vaazhvil

Iniya naatkalae

Ninaithu ninaithu magizhvadhinaal

Vaazhkai inikkumae

Female Part

Rojakkalae

Nam nenjil pookkumae

Vaan meghamae

Pani saalvai porthumae

Female Part

Malargalidam malargalidam

Thaenai konjam ketpomae

Vizhigal tharum kanavugalil

Thaenai alli thelippomae

Female Part

Anaivarumae virumbidavae

Paasathodu iruppomae

Punsirippai parisalithu

Manadhai kollai adippomae

Female Part

Kuzhandhai paruvam

Sugathin ellaiyae

Idhanai vaanga

Vilaigal illaiyae

Vaazhvil endrum

Marubadiyum kidaippadhillaiyae

Female Part

Rojakkalae

Nam nenjil pookkumae

Vaan meghamae

Pani saalvai porthumae

Female Part

Poon thooralae

Saamarangal veesidumae

Nam kannilae..ae..

Kavidhaigalum poothidumae

Rangoli kolam pola

Vaazhkai vannam aagumae

Chorus

Oooo..ooo..ooo..oo..

Oooo..ooo..oo..oo..oo……

தமிழ்

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : ரோஜாக்களே

நம் நெஞ்சில் பூக்குமே

வான் மேகமே பனிச்

சால்வை போர்த்துமே

பெண் : பூந்தூரலே

சாமரங்கள் வீசிடுமே

நம் கண்ணிலே

கவிதைகளும் பூத்திடுமே

ரங்கோலி கோலம் போல

வாழ்க்கை வண்ணம் ஆகுமே

பெண் : ரோஜாக்களே

நம் நெஞ்சில் பூக்குமே

வான் மேகமே பனிச்

சால்வை போர்த்துமே

குழு : ஓஓஓஓ ஓஓ

ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ

பெண் : பறவைகளாய்

பறவைகளாய் பறக்கும்

சின்ன வயதினிலே

கவலைகளை கவலைகளை

காற்றில் பறக்க விடுவோமே

பெண் : பவள மல்லி

பவள மல்லி பூக்கும்

அழகை ரசிப்போமே

மணிக்கணக்கில் பூக்களிடம்

அரட்டை அடித்து சிரிப்போமே

பெண் : மனதில் மனதில்

இசையின் சாரலே இது

தான் வாழ்வில் இனிய

நாட்களே நினைத்து நினைத்து

மகிழ்வதினால் வாழ்க்கை

இனிக்குமே

பெண் : ரோஜாக்களே

நம் நெஞ்சில் பூக்குமே

வான் மேகமே பனிச்

சால்வை போர்த்துமே

பெண் : மலர்களிடம்

மலர்களிடம் தேனைக்

கொஞ்சம் கேட்போமே

விழிகள் தரும் கனவுகளில்

தேனை அள்ளி தெளிப்போமே

பெண் : அனைவருமே

விரும்பிடவே பாசத்தோடு

இருப்போமே புன்சிரிப்பை

பரிசளித்து மனதை கொள்ளை

அடிப்போமே

பெண் : குழந்தை பருவம்

சுகத்தின் எல்லையே இதனை

வாங்க விலைகள் இல்லையே

வாழ்வில் என்றும் மறுபடியும்

கிடைப்பதில்லையே

பெண் : ரோஜாக்களே

நம் நெஞ்சில் பூக்குமே

வான் மேகமே பனிச்

சால்வை போர்த்துமே

பெண் : பூந்தூரலே

சாமரங்கள் வீசிடுமே

நம் கண்ணிலே

கவிதைகளும் பூத்திடுமே

ரங்கோலி கோலம் போல

வாழ்க்கை வண்ணம் ஆகுமே

குழு : ஓஓஓஓ ஓஓ

ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ

Song information

Singer: Mahalakshmi Iyer

Music by: S. A. Rajkumar

Release information: From Priyamana Thozhi (2003) · Lyricist: Pa.Vijay

Explore this song