தமிழ்

தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா
சாமி கூட இல்ல சுத்தமா ஆஆஆ
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
ஈஸ்வரன் மேல் ஆச வச்சி
காத்திருந்தா மீனாட்சி
ஈசனையே கட்டிக்கிட்டா
தென்மதுரை அது சாட்சி
கண்ணன் மேல ஆச வச்சி
காத்திருந்தா ஆண்டாளு
கண்ணனையே கட்டிகிட்டா
சொல்லுதப்பா வரலாறு
வள்ளி மேல ஆச வச்சி
முருகன் அவன் சுத்துனதும்
அண்ணன்காரன் புள்ளையாரு
ஒத்தாச பண்ணுனதும்
சாமி செஞ்ச லீலையினு
கைய கூப்புறான் தம்பி
நீயும் நானும் காதலிச்சா
கைய ஓங்குறான்
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
காதலுக்கு கண் இல்லேன்னு
சொன்னவன்தான் முட்டாளு
கண்ணு மட்டும் இல்லையினா
காதலேதும் கெடயாது
தண்ணிக்குள்ள அழுத்தினாலும்
பந்து உள்ள போகாது
காதல் மட்டும் இல்லையினா
பூமி இங்க சுத்தாது
ஆச வச்ச மனசு ரெண்ட
பிரிச்சவங்க வாழ்ந்ததில்லே
சூரியன தீக்குச்சியால
எரிச்சவங்க யாருமில்ல
கதைகள் நெறைய கேட்ட பின்னும்
அறிவு வரலையா தம்பி
காதல் ஒரு வேதமுன்னு
தெளிவு வரலையா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
ஆஆஆ ஆஆஆ

Song details

படம்: ரசிகன் (1994)

இசை: தேவா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்: தேவா

Album: ரசிகன்

Song video

Watch on YouTube