Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Male Part Verukku neethaanae aadhaaram manithan Vaazhvukku anbae aadhaaram Female Part Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Female Part Vaanam kodukkindra mazhai undu Vaiyam kodukindra payir undu Vaanam kodukkindra mazhai undu Vaiyam kodukindra payir undu Female Part Yaavum kodukindra manam kondu Ingu vaazhum anaivarkkum pugazhundu Male Part Nallennam illaamal Nanmaigal seiyaamal Nenjangal vaazhnthaal paavam Nallennam illaamal Nanmaigal seiyaamal Nenjangal vaazhnthaal paavam Male Part Engengu paainthaalum thagaththai theerkkaatha Thanneeraal undo laabam Female Part Oorukku nallathoru ubakaaram seiyya
Naangal eduththathintha avathaaram Female Part Pillai sirippodu nagai minna Ingu kollai adikkindra gunam enna Male : Devan koduththaanae pala kodi Avan perai keduththaanae padupaavi Female Part Kaththikkum puththikkum eppothum poraattam Thannaiyae maranthaan manithan Male : Anbukkum panbukkum sambantham illaatha Ullangal yaavum mirugam Female Part Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Female Part Kaigal koduththaanae edharkaga pirar Kanneer thudaikkindra panikkaaga Male : Kaalgal koduththaanae edharkaga pirar Kashtam therinthangu thunai poga Female Part Eppothum thiththikkum muppaalai Thanthaanae thennaattil vaazhntha gnani Male : Naattukkum veettukkum paattukkal Thanthaanae bharathi ennum thaenee…. Both : Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Verukku neethaanae aadhaaram manithan Vaazhvukku anbae aadhaaram
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் ஆண் : வேருக்கு நீதானே ஆதாரம் மனிதன் வாழ்வுக்கு அன்பே ஆதாரம்...... பெண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் பெண் : வானம் கொடுக்கின்ற மழை உண்டு வையம் கொடுக்கின்ற பயிர் உண்டு வானம் கொடுக்கின்ற மழை உண்டு வையம் கொடுக்கின்ற பயிர் உண்டு பெண் : யாவும் கொடுக்கின்ற மனம் கொண்டு இங்கு வாழும் அனைவர்க்கும் புகழுண்டு ஆண் : நல்லெண்ணம் இல்லாமல் நன்மைகள் செய்யாமல் நெஞ்சங்கள் வாழ்ந்தால் பாவம் நல்லெண்ணம் இல்லாமல் நன்மைகள் செய்யாமல் நெஞ்சங்கள் வாழ்ந்தால் பாவம் ஆண் : எங்கெங்கு பாய்ந்தாலும் தாகத்தை தீர்க்காத தண்ணீரால் உண்டோ லாபம் ஆண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் பெண் : பிள்ளை சிரிப்போடு நகை மின்ன இங்கு கொள்ளை அடிக்கின்ற குணம் என்ன ஆண் : தேவன் கொடுத்தானே பல கோடி அவன் பேரைக் கெடுத்தானே படுபாவி பெண் : கத்திக்கும் புத்திக்கும் எப்போதும் போராட்டம் தன்னையே மறந்தான் மனிதன் ஆண் : அன்புக்கும் பண்புக்கும் சம்பந்தம் இல்லாத உள்ளங்கள் யாவும் மிருகம் பெண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் பெண் : கைகள் கொடுத்தானே எதற்காக பிறர் கண்ணீர் துடைக்கின்ற பணிக்காக ஆண் : கால்கள் கொடுத்தானே எதற்காக பிறர் கஷ்டம் தெரிந்தங்கு துணை போக பெண் : எப்போதும் தித்திக்கும் முப்பாலை தந்தானே தென்னாட்டில் வாழ்ந்த ஞானி ஆண் : நாட்டுக்கும் வீட்டுக்கும் பாட்டுக்கள் தந்தானே பாரதி என்னும் தேனீ......... இருவர் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் வேருக்கு நீதானே ஆதாரம் மனிதன் வாழ்வுக்கு அன்பே ஆதாரம்......
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sathya Sundharam (1981) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Sathya Sundharam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan