Roman script

Singer : Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Female Part

Ennai ninaithu adimai kondu

En idar koduthu

Thannai ninaiya tharugindraan

Punnai virasu magizh

Viyan naarai yuur mukkannn

Arasu magizh athi mugathaan

Viyan naarai yuur mukkannn

Arasu magizh athi mugathaan…aa….

Female Part

Ongaara roobathil uruvaanavan

Andha oosaikkul vedhathin porulaanavan

Ongaara roobathil uruvaanavan

Andha oosaikkul vedhathin porulaanavan

Female Part

Neengaatha ngyaanathai tharuvaan avan

Thannai pollaa pillai eninum varuvaan avan

Neengaatha ngyaanathai tharuvaan avan

Thannai pollaa pillai eninum varuvaan avan

Female Part

Ongaara roobathil uruvaanavan

Andha oosaikkul vedhathin porulaanavan

Female Part

Baala ganapathi thannai

Seelam arulaga endru

Naam pottra vazhi kattuvaan

Veera ganapathi munbu

Yaarum vanangida vandhu

Ratchithu kanai theetuvaan

Female Part

Tharuna ganapathi indru

Varuga viraivudan endru

Oor sollil oli kootuvaan

Thuvaaja ganapathi ingu

Madamai vilagidu vandhu

Nool thandhu pugazh sootuvaan

Female Part

Aindhu karamaada aanai mugam maada

Arul tharum kari muganae

Naavarpazham kondu modhagam yendhi

Nalam tharum sivan maganae

Muzhu mudhalae param porulae

Thamizh tharum amudhae

Female Part

Ongaara roobathil uruvaanavan

Andha oosaikkul vedhathin porulaanavan

Female Part

Sakthi ganapathi

Selva latchmi ganapathi

Gnyaana chithra ganapathiyum neeyae

Bhaktha ganapathi vellum vigna ganapathi

Nediya bhuvana ganapathiyum neeyae

Female Part

Utchishta ganapathi singhana ganapathi

Oorthuva ganapathiyum neeyae

Maha ganapathi engal haerambha ganapathi

Nirtha ganapathiyum neeyae

Female Part

Ongaara roobathil uruvaanavan

Andha oosaikkul vedhathin porulaanavan

Neengaatha ngyaanathai tharuvaan avan

Thannai pollaa pillai eninum varuvaan avan

Female Part

Ongaara roobathil uruvaanavan

Andha oosaikkul vedhathin porulaanavan

தமிழ்

பாடகி :  வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பெண் : என்னை நினைந்தடிமை கொண்டென்

இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான்

புன்னை விரசுமகிழ் சோலை

வியன்நாரை யூர்முக்கண்

அரசு மகிழ் அத்தி முகத்தான்

வியன்நாரை யூர்முக்கண்

அரசுமகிழ் அத்தி முகத்தான்

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்

அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்

ஓங்கார ரூபத்தில் உருவானவன்

அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்

பெண் : நீங்காத ஞானத்தை தருவான் அவன்

தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்

நீங்காத ஞானத்தை தருவான் அவன்

தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்

அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்

பெண் : பால கணபதி தன்னை சீலம் அருளுக என்று

நாம் போற்ற வழிக் காட்டுவான்

வீர கணபதி முன்பு யாரும் வணங்கிட வந்து

ரட்சித்து கணை தீட்டுவான்

பெண் : தருண கணபதி இன்று வருக விரைவுடன் என்று

ஓர் சொல்லில் ஒளிக் கூட்டுவான்

துவாஜ கணபதி இங்கு மடமை விலகிட வந்து

நூல் தந்து புகழ் சூட்டுவான்

பெண் : ஐந்து கரமாட ஆனை முகமாட

அருள் தரும் கரி முகனே

நாவற்பழம் கொண்டு மோதகம் ஏந்தி

நலன் தரும் சிவன் மகனே

முழு முதலே பரம் பொருளே

தமிழ் தரும் அமுதே.....

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்

அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்

பெண் : சக்தி கணபதி செல்வ லட்சுமி கணபதி

ஞான க்ஷிப்ர கணபதியும் நீயே

பக்த கணபதி வெல்லும் விக்ன கணபதி

நெடிய புவன கணபதியும் நீயே

பெண் : உச்சிட்ட கணபதி சிங்க கணபதி

ஊர்த்துவ கணபதியும் நீயே

மஹா கணபதி எங்கள் ஹேரம்ப கணபதி

நிருத்த கணபதியும் நீயே

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்

அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்

நீங்காத ஞானத்தை தருவான் அவன்

தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்

அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்....

Song information

Singer: Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Vetri Vinayagar (1996) · Singer: Vani Jayaram · Lyricist: Kamakodiyan · Music: M. S. Vishwanathan

Explore this song