Roman script

Singer : S. Janaki

Music by : Deva

Female Part

Oh ho ho..

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Kaadhal ennum mandhiram

Kaadhil sonna mannanae

Aasai ennum oonjalil

Aadavaitha kannanae

Thaniyaga naan vaazha mudiyadhu..

Nee indri en vaanam vidiyadhu

Vaaramal povatho..oh..ho..

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Female Part

Or naalile

Vizhi naalum sernthathe..ae

Un tholilae ilamaanum saindhadhae

Un vaasalthan

En koyil sannithi..ee

Nee illaiyel ingu yedhu nimmadhi

Female Part

Nee thandha mogangal

Yaarodu naan solla

Naan paadum raagangal

Neeyandri veralla

Aanadham alaipaayum

Neeyum naanum serum pozhudhu

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Female Part

Pon oviyam

Kadal thandi vandhathu..

Than jeevanai un kaiyil thandhathu

Namm nesamae

Verum kaanal aavadha..ahh.

Naan indriyae un kaalgal povadha

Female Part

En paadhi neeyaaga

Un paadhi naanaaga..

Yen indru sendraayo

Nee mattum veraaga

Vaanam nee thazhuvadhu

Vaazhvathedhu kaadhal nilavu

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Kaadhal ennum mandhiram

Kaadhil sonna mannanae

Aasai ennum oonjalil

Aadavaitha kannanae

Thaniyaaga naan vaazha mudiyathu..

Nee indri en vaanam vidiyadhu

Vaaramal povadho..oh..ho.

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஓ ஹோ ஹோ......ஓ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ.....ஓ ஹோ ஹோ

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

காதல் என்னும் மந்திரம்

காதில் சொன்ன மன்னனே

ஆசை என்னும் ஊஞ்சலில்

ஆட வைத்த கண்ணனே

தனியாக நான் வாழ முடியாது

நீ இன்றி என் வானம் விடியாது

வாராமல் போவதோ...ஓ...ஹோ

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

பெண் : ஓர் நாளிலே

விழி நாலும் சேர்ந்ததே....ஏ....

உன் தோளிலே இளமானும் சாய்ந்ததே

உன் வாசல்தான்

என் கோயில் சந்நிதி....ஈ....

நீ இல்லையேல் இங்கு ஏது நிம்மாதி

பெண் : நீ தந்த மோகங்கள்

யாரோடு நான் சொல்ல

நான் பாடும் ராகங்கள்

நீயன்றி வேறல்ல

ஆனந்தம் அலைபாயும்

நீயும் நானும் சேரும் பொழுது

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

பெண் : பொன் ஓவியம்

கடல் தாண்டி வந்தது

தன் ஜீவனை உன் கையில் தந்தது

நம் நேசமே

வெறும் கானல் ஆவதா....ஆ...

நான் இன்றியே உன் கால்கள் போவதா

பெண் : என் பாதி நீயாக

உன் பாதி நானாக....

ஏன் இன்று சென்றாயோ

நீ மட்டும் வேறாக

வானம் நீ தழுவாது

வாழ்வதேது காதல் நிலவு

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

காதல் என்னும் மந்திரம்

காதில் சொன்ன மன்னனே

ஆசை என்னும் ஊஞ்சலில்

ஆட வைத்த கண்ணனே

தனியாக நான் வாழ முடியாது

நீ இன்றி என் வானம் விடியாது

வாராமல் போவதோ...ஓ...ஹோ

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

Song information

Singer: S. Janaki

Music by: Deva

Release information: From Unakkaga Piranthen (1992) · Lyricist: Vaali

Explore this song