Roman script

Singer : T. M. Soundarajan

Music by : S. P. Kothandapani

Lyrics by : Kannadasan

Male Part

O dharmathin thalaivanae

Un thanimaiyai paarada

O dharmathin thalaivanae

Un thanimaiyai paarada

Male Part

Urimai ennum vilakkai nee

Olithu vaithathenada

Unmaiyum uranginaal

Ulagame yedhada thalaivanae koorada

Male Part

Kaadu paartha pillai veedu paarthathillai

Veedu paarkka vandhum nee yedu paarkkavillai

Kaadu paartha pillai veedu paarthathillai

Veedu paarkka vandhum nee yedu paarkkavillai

Kannirandil un karunai endha kannada

Kannirandil un karunai endha kannada

Un kanngalukkae nee kattum baedham yenada

Male Part

O dharmathin thalaivanae

Un thanimaiyai paarada

O dharmathin thalaivanae

Un thanimaiyai paarada

Male Part

Urimai ennum vilakkai nee

Olithu vaithathenada

Unmaiyum uranginaal

Ulagame yedhada thalaivanae koorada

Male Part

Uyir illadha annai uravilladha thandhai

Arul illadha deivam oru thunai illadha pillai

Uyir illadha annai uravilladha thandhai

Arul illadha deivam oru thunai illadha pillai

Ondrum illai endra podhu jananam yenada

Edharkkum uhdavadhavan endraal oru koyil yenada

Male Part

O dharmathin thalaivanae

Un thanimaiyai paarada

O dharmathin thalaivanae

Un thanimaiyai paarada

Male Part

Urimai ennum vilakkai nee

Olithu vaithathenada

Unmaiyum uranginaal

Ulagame yedhada thalaivanae koorada

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஓ...தர்மத்தின் தலைவனே !

உன் தனிமையை பாரடா

ஓ...தர்மத்தின் தலைவனே !

உன் தனிமையை பாரடா

ஆண் : உரிமை என்னும் விளக்கை நீ

ஒளித்து வைத்ததேனடா

உண்மையும் உறங்கினால்

உலகமே ஏதடா தலைவனே கூறடா....

ஆண் : காடு பார்த்த பிள்ளை வீடு பார்த்ததில்லை

வீடு பார்க்க வந்தும் நீ ஏடு பார்க்கவில்லை

காடு பார்த்த பிள்ளை வீடு பார்த்ததில்லை

வீடு பார்க்க வந்தும் நீ ஏடு பார்க்கவில்லை

கண்ணிரண்டில் உன் கருணை எந்தக் கண்ணடா

கண்ணிரண்டில் உன் கருணை எந்தக் கண்ணடா

உன் கண்களுக்கே நீ காட்டும் பேதம் ஏனடா

ஆண் : ஓ...தர்மத்தின் தலைவனே !

உன் தனிமையை பாரடா

ஓ...தர்மத்தின் தலைவனே !

உன் தனிமையை பாரடா

ஆண் : உரிமை என்னும் விளக்கை நீ

ஒளித்து வைத்ததேனடா

உண்மையும் உறங்கினால்

உலகமே ஏதடா தலைவனே கூறடா....

ஆண் : உயிரில்லாத அன்னை உறவில்லாத தந்தை

அருளில்லாத தெய்வம் ஒரு துணையில்லாத பிள்ளை

உயிரில்லாத அன்னை உறவில்லாத தந்தை

அருளில்லாத தெய்வம் ஒரு துணையில்லாத பிள்ளை

ஒன்றும் இல்லை என்ற போது ஜனனம் ஏனடா

எதற்கும் உதவாதவன் என்றால் ஒரு கோயில் ஏனடா

ஆண் : ஓ...தர்மத்தின் தலைவனே !

உன் தனிமையை பாரடா

ஓ...தர்மத்தின் தலைவனே !

உன் தனிமையை பாரடா

ஆண் : உரிமை என்னும் விளக்கை நீ

ஒளித்து வைத்ததேனடா

உண்மையும் உறங்கினால்

உலகமே ஏதடா தலைவனே கூறடா....

Song information

Singer: T. M. Soundarajan

Music by: S. P. Kothandapani

Lyrics by: Kannadasan

Release information: From Kuzhanthai Ullam (1969) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: S. P. Kothandapani

Explore this song